தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்... வெளியான முக்கிய தகவல்

Salary Hike News: 8வது ஊதிய குழுவை அமல்படுத்துவதாக வெளியான அறிவிப்புக்கு பின், மத்திய ஊழியர்கள் மத்தியில் சம்பள அதிகரிப்பு குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே போல் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2025, 08:59 AM IST
  • தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான தகவல் வெளியாகியுள்ளது.
  • சம்பள உயர்வு மற்றும் வருவாய் கணக்கெடுப்பு.
  • சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள துறைகள்.
தனியார் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்... வெளியான முக்கிய தகவல் title=

Salary Hike News: 8வது ஊதிய குழுவை அமல்படுத்துவதாக வெளியான அறிவிப்புக்கு பின், மத்திய ஊழியர்கள் மத்தியில் சம்பள அதிகரிப்பு குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதே போல் தனியார் துறையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளம் 9.2% வரை அதிகரிக்கும்

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டு இந்தியாவில் சம்பளம் 9.2% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விகிதம் 2024ம் ஆண்டில் 9.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கம். இந்தத் தகவல் 2024-25 ஆம் ஆண்டு சம்பள உயர்வு மற்றும் வருவாய் கணக்கெடுப்பிலிருந்து வெளிவந்துள்ளது.

சம்பள உயர்வு மற்றும் வருவாய் கணக்கெடுப்பு

உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான AON PLC நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்ட 2024-25 ஆம் ஆண்டு வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் வருவாய் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சம்பள உயர்வு இந்த ஆண்டு 9.2% வரை இருக்கும், கடந்த ஆண்டு இது 9.3 சதவீதமாக இருந்தது என்றும் கூறியுள்ளது.. அதாவது இந்த ஆண்டு சம்பள உயர்வு கடந்த ஆண்டை விட குறைவாக அதிகரிக்கும்.

சம்பளம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள துறைகள்

1,400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 45 வெவ்வேறு தொழில்களின் தரவுகளை இணைத்து AON ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பொறியியல் வடிவமைப்பு சேவைகள், ஆட்டோமொபைல் மற்றும் வாகன உற்பத்தி, NBFC (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்), சில்லறை விற்பனைத் துறை, உலகளாவிய திறன் மையங்கள் (GCCகள்) மற்றும் வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றின் கீழ் வரும் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வைக் காணலாம்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வு

மெர்சரின் கணக்கெடுப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

சமீபத்தில், மனிதவள ஆலோசனை நிறுவனமான மெர்சரின் 'ஊதிய ஆய்வு' அறிக்கையும் வெளியிடப்பட்டது, இது 2025ம் ஆண்டில் இந்தியாவில் சம்பளம் 9.4% அதிகரிக்கும் என்று கூறுகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,550க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்நுட்பம், வாழ்க்கை அறிவியல், நிதி சேவைகள், நுகர்வோர் பொருட்கள், உற்பத்தி மற்றும் ஆட்டோமொடிவ் போன்ற துறைகள் அடங்கும்.

9.7 சதவீதம் ஊதிய உயர்வு பெறும் துறைகள்

வாகனத் துறையில் சம்பளம் 8.8 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி மற்றும் பொறியியல் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 8 முதல் 9.7 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இது 8.8 சதவீதமாக இருந்தது.

2025ம் ஆண்டில் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்

2025-ம் ஆண்டில் 37 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளில் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டும் இந்த போக்கு தொடரலாம் என்று அறிக்கையின்படி, நிறுவனங்களின் ஆட்குறைப்பு விகிதம் 11.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு : கேட்டது என்ன, கிடைத்தது என்ன? மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News