Ind vs Ban: மாபெரும் சாதனைகளை படைக்க இருக்கும் ரோகித் சர்மா.. இதை செய்தால் போதும்!

Rohit Sharma: இன்று (பிப்.20) நடக்க இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Feb 20, 2025, 01:11 PM IST
  • சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று (பிப்.19) தொடங்கியது
  • இந்தியா - வங்கதேசம் அணி இன்று மோதுகின்றன
  • ரோகித் சர்மா மாபெரும் சாதனைகளை படைக்க உள்ளார்
Ind vs Ban: மாபெரும் சாதனைகளை படைக்க இருக்கும்  ரோகித் சர்மா.. இதை செய்தால் போதும்! title=

Rohit Sharma: மினி உலகக் கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று (பிப்.19) பாகிஸ்தானில் தொடங்கியது. இந்த நிலையில், இந்திய அணி இத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று (பிப்.20) துபாயில் நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு சாதனைகளை முறியடிக்க உள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரராக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. இவர் இதுவரை 268 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 10,988 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில், அவர் பல்வேறு சாதனைகளை படைக்க இருக்கிறார். 

இந்திய அளவில் 4வது இடம் 

ஒருநாள் போட்டிகளில் இன்னும் 12 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் 11,000  ரன்களை எட்டுவார். இதன் மூலம் 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது இந்திய வீரர் மற்றும் உலக அளவில் 10வது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். 

அதே போல் இதுவரை ரோகித் சர்மா 260 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து இருக்கிறார். அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் எடுத்து 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் வகையில், இதனை விரைவாக எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை படைப்பார். 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி : விராட்கோலி நினைத்தது மட்டும் நடந்தால் கோப்பை உறுதி

11,000 ரன்களை விரைவாக எட்டிய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலியும், இரண்டாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் இருக்கின்றனர். சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார். அதனை முறியடித்து ரோகித் சர்மா இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். 

வங்கதேச அணிக்கு எதிராக அதிக சதம் 

இந்த சாதனைகள் மட்டுமல்லாமல் இப்போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தால், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு உலகக் கோப்பை மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். முன்னதாக ரோகித் சர்மா 2015 ஒருநாள் உலகக் கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைகளில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்து இருக்கிறார்.  மேலும், இப்போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்தால், அது அவரது 50வது சர்வதேச சதமாக இருக்கும். 

கேப்டனாக 100வது வெற்றி 

வங்கதேச அணிக்கு எதிராக இன்று நடக்கும் இப்போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றால், கேப்டனாக இந்திய அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த பெருமையை அவர் பெறுவார். முன்னதாக இந்திய அணிக்கு 100 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்த கேப்டன்களாக முகமது அசாருதீன், தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர். 

இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.  

மேலும் படிங்க: 2025 ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News