Kash Patel Roots In India: அமெரிக்காவின் FBI தலைவராக இந்திய - அமெரிக்கரான காஷ் பட்டேல் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பகவத் கீதையின் மீது பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். இவர்தான் அமெரிக்காவின் FBI அமைப்புக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய - அமெரிக்கர் ஆவார். இந்நிலையில், அவருக்கும் இந்தியாவுக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
Kash Patel: படிதார் சமூகத்தை சேர்ந்த காஷ் பட்டேல்
காஷ் பட்டேலின் (Kash Patel) முன்னோர்கள் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள பத்ரன் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அங்கிருந்து அவர்கள் கடந்த 70-80 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் உகாண்டாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். காஷ் பட்டேலின் வேர் குறித்து இங்கு காணலாம்.
44 வயதான காஷ் பட்டேல் நியூயார்க் நகரில் பிறந்தவர் ஆவார். அவர் படிதார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். படிதார் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்த காஷ் பட்டேலின் குடும்பத்தினர் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு சென்ற உடன், பத்ரன் கிராமத்தில் அவர்களுக்கு இருந்த பூர்வீக சொத்தையும் விற்றுவிற்றதாக தெரிவிக்கின்றனர்.
Kash Patel: காஷ் பட்டேலின் குடும்பத்தினர்
ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ச் காம் படிதார் மண்டல் என்ற படிதார் சமுதாயம் சார்ந்த அமைப்பு ஒன்று உள்ளது. இந்த அமைப்பு இந்த சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர்கள் குறித்து தனியாக பதிவு செய்து வைத்துள்ளனர். இந்த பதிவுக்கு 'வான்ஷாவலி' என அழைக்கின்றனர். இதில், ஒரு குடும்பத்தினரின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து உறுப்பினர்களையும் பதிவு செய்து வைக்கின்றனர்.
வான்ஷாவலி என்ற அந்த பதிவில் காஷ் பட்டேலின் தந்தை பிரமோத் பட்டேல், காஷ் பட்டேலின் தாத்தா, மூத்த சகோதரர் ஆகியோரின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அவர்களின் குடும்பப் பதிவில் காஷ் பட்டேலின் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர் குடும்பத்தைச் சேர்ந்த 18 தலைமுறையினரின் பெயர்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Kash Patel: உகாண்டாவுக்கு குடிபெயர்ந்த காஷ் பட்டேல் குடும்பம்
ச் காம் படிதார் மண்டல் என்ற படிதார் சமுதாயம் சார்ந்த அமைப்பின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் கூறுகையில்,"எங்களிடம் உள்ள பதிவுகளின்படி காஷ் பட்டேலின் குடும்பம் பத்ரன் கிராமத்தின் மோதி காட்கி பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த 70-80 ஆண்டுகளுக்கு முன் உகாண்டாவுக்கு குடியெபர்ந்தனர்.
அவர்கள் இங்கிருந்த பூர்வீக வீடு, நிலம் ஆகியவற்றை விற்றுவிற்று சென்றனர். அவர்களின் அனைத்து உறவினர்களும் அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். காஷ் பட்டேலின் குடும்பத்தைச் சேர்ந்த யாராவது இந்தியாவுக்கு வரும்போது, அவர்களிடம் வான்ஷவாலியில் காஷ் பட்டேல் மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்க அனுமதி கேட்போம்.
Kash Patel: இடி அமீனின் உத்தரவால் வெளியேறிய இந்தியர்கள்
இதுவரை நாங்கள் காஷ் பட்டேலை சந்தித்தது இல்லை. அவரது குடும்பம் சமீப காலமாக ஆனந்த் மாவட்டத்திற்கு வரவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது" என்றார்.
1971இல் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டபோது, காஷ் பட்டேலின் குடும்பமும் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. உகாண்டாவில் இருந்து இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என ராணுவ சதியில் ஆட்சியை கைப்பற்றிய சர்வாதிகாரி இடி அமீன் உத்தரவிட்டார். அப்போது அவர் இந்தியர்கள் நாடு திரும்ப 90 நாள்கள் காலகெடு விதித்தார். அப்போது பலரும் நாடு திரும்பினர்.
Kash Patel: கனடா - அமெரிக்கா
மேலும், அவர்களில் பலரும் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் குடிபெயர்வதற்கும் விண்ணப்பித்திருந்தனர். காஷ் பட்டேலின் குடும்பத்தினருக்கு கனடாவில் குடிப்பெயர அனுமதி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்னர், காஷ் பட்டேலின் குடும்பத்தினர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். 1980இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காஷ் பட்டேல் பிறந்துள்ளார். வழக்கறிஞராக உள்ள காஷ் பட்டேல், ஐஸ் ஹாக்கி வீரராக உள்ளார். அவர் 6 வயதில் இருந்து ஐஸ் ஹாக்கி விளையாடி வருகிறார். 'நாங்கள் குஜராத்தியர்கள்' என அவரே ஊடகம் ஒன்றிடம் கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 3ம் உலகப் போர் தூரத்தில் இல்லை, ஆனால்... டிரம்ப் பேச்சு - சர்வதேச அரசியலில் பரபரப்பு
மேலும் படிக்க | உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ