பார்த்திபன் கனவில் லியோ.. விஜய் குறித்து பார்த்திபன் பகிர்ந்த சுவாரஸ்யம்!

நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் குறித்து இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Feb 20, 2025, 05:12 PM IST
  • பார்த்திபன் கனவில் நடிகர் விஜய்
  • எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் பதிவு
பார்த்திபன் கனவில் லியோ.. விஜய் குறித்து பார்த்திபன் பகிர்ந்த சுவாரஸ்யம்!  title=

நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'தி கோட்'. இத்திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதனால் அவர் ஜன நாயகன் படத்துடன் தனது திரைத்துறை வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். அப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கனவில் விஜய் வந்ததாகவும் விஜய்யுடன் தான் வெகு நேரம் பேசியதாகவும் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் அவருக்கு ஆதரவாகவும் அவரின் செயல்பாடுகள் குறித்தும் பார்த்திபன் கருத்து தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் இன்று (பிப்.20) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் விஜய் தனது கனவில் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிங்க: இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் 7 படங்கள்!

பார்த்திபனின் பதிவு

அந்த பதிவில், "நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் .. அது கனவு! ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. 
கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்.. இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்" என குறிப்பிட்டுள்ளார். 

ரசிகர்கள் கேள்வி

அவரது இந்த பதிவு ரசிகர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. அதில் ஒருவர், சார் இதை இங்க சொல்லியே ஆகனும், நேற்று இரவு என்னோட கனவில் நீங்க வந்தீங்க ! சினிமா பத்தி பேசிட்டு இருந்தோம். தங்களிடம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம் எடுக்கச்சொல்லி ஒரு கோரிக்கை வைத்தேன். நீங்களும் யோசித்து விட்டு சரினு சொன்னீங்க. இது நடக்குமா சார்! அதற்கு பார்த்திபன், இது விரைவி பலிக்கும் கனவு என பதில் அளித்துள்ளார். 

மற்றொருவர், "தவெக வில் சேர ஆசை இருந்தால் அதை நீங்கள் நேரடியாக செல்லுங்ககள்.." என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு, "இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா! இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே" என பார்த்திபன் பதில் அளித்துள்ளார். இது போன்ற சில கமெண்டுகள் கவனத்தை ஈர்த்துள்ளது.  

மேலும் படிங்க: விஜய்-சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர்.. இப்போ இப்படி ஆயிட்டாரே! வைரலாகும் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News