சாம்பியன்ஸ் டிராபி 2025: AFG vs SA போட்டியை எப்போது, ​​எங்கு இலவசமாக பார்க்கலாம்

ICC Champions Trophy 2025 Live Streaming: இந்தியாவில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டியை நேரடி ஒளிபரப்பை எப்போது மற்றும் ​​எங்கு இலவசமாக பார்க்கலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 21, 2025, 10:01 AM IST
சாம்பியன்ஸ் டிராபி 2025: AFG vs SA போட்டியை எப்போது, ​​எங்கு இலவசமாக பார்க்கலாம் title=

AFG vs SA Free Watch: ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (பிப்ரவரி 21, வெள்ளிக்கிழமை) ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் மூன்றாவது போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் பேங்க் ஸ்டேடியத்தில் நடைபெறும். இது போட்டியின் குரூப் பி-யின் முதல் ஆட்டமாகும். 

தென்னாப்பிரிக்கா அணியின் செயல்பாடு

தென்னாப்பிரிக்கா சமீபத்திய ஐ.சி.சி போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. அதேநேரம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நார்ட்ஜே, நந்த்ரே பர்கர் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் காயங்கள் காரணமாக வெளியேறினர். தென்னாப்பிரிக்கா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முன்பு 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் அரையிறுதியை எட்டியது. இரண்டு முறையும் தோல்வியடைந்ததால், சாம்பியன்ஸ் டிராபியில் தென்னாப்பிரிக்கா தங்களை மீட்டுக்கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு

ஆப்கானிஸ்தான் அணியை குறித்து பார்த்தால், இந்தியாவில் நடந்த 2023 உலகக் கோப்பையில் அந்த அணியின் செயல்திறன் சிறப்பாக இருந்தது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் தொடர்களில் 4 தொடரை வென்றுள்ளது. இதில் வலிமைமிக்க அணியான தென்னாப்பிரிக்காவை 2-1 என்ற கணக்கில் வென்றதும் அடங்கும். ஆப்கானிஸ்தான் அணியின் சமீபத்திய ஆட்டத்தின் செயல்திறனை பார்த்தால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தனது முதல் போட்டியில் அவர்கள் முழு நம்பிக்கையுடன் விளையாடுவார்கள்.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டி நேரம் மற்றும் ஆடுகளம்

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி பிப்ரவரி 21 (வெள்ளிக்கிழமை) கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்.

ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டியை இலவசமாக எங்கு பார்ப்பது?

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இலவசமாக பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா போட்டி தொலைக்காட்சி நேரலையில் எங்கு பார்ப்பது?

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் விவரம்

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், குல்பாடின் நைப், முகமது நபி, ரஷித் கான், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி

தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரஸ்ஸி வான் டி டஸ்ஸன், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி

மேலும் படிக்க - சஹால் - தனஸ்ரீ வர்மா விவாகரத்து உறுதி! நீதிமன்றம் உத்தரவு... மணமுறிவுக்கு என்ன காரணம்?

மேலும் படிக்க - இந்தியா போராடி வெற்றி; கில் நிதான சதம் - பாகிஸ்தான் போட்டியில் செய்ய வேண்டியது என்ன?

மேலும் படிக்க - IND vs BAN: கைக்கூப்பி மன்னிப்பு கேட்ட ரோஹித்... அக்சர் பட்டேல் ஷாக் - என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News