டெல்லியின் அடுத்த முதலமைச்சராகிறார் ரேகா குப்தா.. நாளை பதவியேற்பு

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2025, 08:40 PM IST
டெல்லியின் அடுத்த முதலமைச்சராகிறார் ரேகா குப்தா.. நாளை பதவியேற்பு title=

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக ரேகா குப்தா பதவியேற்பார். சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா இருப்பார். ரேகா குப்தா முதல்வராகும் தகவல் வந்தவுடன் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள எம்எல்ஏ ரேகா வீட்டில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. இனிப்புகள் விநியோகம் தொடங்கியுள்ளன. ரேகா குப்தா முதல்முறையாக எம்எல்ஏ ஆனார். கூட்டத்தில் இருந்து வந்து மனோஜ் திவாரி ரேகா குப்தாவை வாழ்த்தினார்.

பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ரேகா குப்தாவின் பெயர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வராக ரேகா குப்தா பிப்ரவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார். ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை ரேகா குப்தா 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்களுக்குப் பிறகு முதல்வரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது.

முன்னாள் மாணவர் தலைவரான ரேகா குப்தா,  தற்போது டெல்லி பாஜகவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். 50 வயதான இவர், முன்னதாக பாஜகவின் மகளின் அணியின் தேசிய துணைத் தலைவராக இருந்துள்ளார். வழக்கறிஞரான குப்தா, 1996 முதல் 1997 வரை ABVP அமைப்பு சார்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல்வர் பதவிக்கான பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழின் முதல் நகல் வெளியாகியுள்ளது. இந்த அழைப்பிதழில் அனைவரையும் விழாவில் பங்கேற்குமாறு தலைமைச் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெறும் என அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில், டெல்லியைச் சேர்ந்த 48 எம்எல்ஏக்கள், 7 எம்பிக்கள், 2 பார்வையாளர்கள், 3 பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்கள், டெல்லி பாஜக தலைவர், டெல்லி பொதுச் செயலாளர், அமைப்பு அமைச்சர் என மொத்தம் 65 பேர் கலந்து கொண்டனர். 

கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்எல்ஏக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம்எல்ஏக்களில் விஜேந்திர குப்தா, ரேகா குப்தா, அரவிந்தர் சிங் லவ்லி, அஜய் மஹாவர், சதீஷ் உபாத்யாய், ஷிகா ராய், அனில் சர்மா மற்றும் டாக்டர் அனில் கோயல், கபில் மிஸ்ரா மற்றும் குல்வந்த் ராணா ஆகியோர் அடங்குவர்.

Trending News