PM Kisan 19th Installment: கோடிக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வந்திருக்கிறது. ஆம், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜா திட்டத்தில் பயனாளராக உள்ள விவசாயிகளுக்கு 19வது தவணைத்தொகை நாளை (பிப். 24) வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பகல்பூரில் தொடங்கி வைக்கிறார்.
PM Kisan 19th Installment: கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதி ஆதரவு
கோடிக்கணக்கான விவசாயிகள் இதுவரை 18 தவணைகளில் இந்த நிதியை பெற்று வந்தனர். கடந்தாண்டு அக். 5ஆம் தேதி பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 18வது தவணைத் தொகை விநியோகத்தை மகாராஷ்டிராவின் வாஷிம் நகருக்கு வருகை தந்த போது பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு நிதி ஆதரவை அளிக்கிறது.
PM Kisan 19th Installment: இந்த திட்டத்தில் உயரும் பயனாளர்கள்
விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக நிதி செலுத்தப்படுகிறது. கடந்த 18வது தவணையின்போது 9.6 கோடி விவசாயிகள் இத்திட்டத்திற்கு பயனாளிகளாக இருந்தனர். தற்போது 19வது தவணையின்போது பயனாளர்களின் எண்ணிக்கை 9.8 ஆக உயர்ந்துள்ளது என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
PM Kisan 19th Installment: இந்த விவசாயிகளுக்கு நிதி வராது
இருப்பினும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் சில விவசாயிகளுக்கு மட்டும் தவணை தொகை வந்து சேராது. காரணம், e-KYC சரிபார்ப்பை செய்யாவிட்டாலும், நில பத்திரங்கள் சரிபார்ப்பை செய்யாவிட்டாலும் தவணை தொகை வராது. எனவே, இதனை செய்யாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று ஆவணங்களையும், பிற தகவல்களையும் சரிபார்ப்பு செய்யவும், இப்படி செய்தால் அடுத்த தவணை தொகையை பெற வாய்ப்புள்ளது.
PM Kisan 19th Installment: இந்த திட்டத்தில் சேர என்ன தேவை?
இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் விவசாயியாக இருக்க வேண்டும். 2 ஹெக்டர் அல்லது அதற்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே இத்திட்டத்தில் பயனர்களாக சேர்க்கப்படுவார்கள். இந்த திட்டத்தில் பயன்பெற சில ஆவணங்கள் தேவை. ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள், நில உரிம ஆவணம், மொபைல் நம்பர் ஆகியவை தேவைப்படும். இதில் ஒன்று இல்லை என்றாலும் திட்டத்தில் சேர இயலாது.
PM Kisan 19th Installment: இந்த திட்டம் யாருக்கு கிடையாது?
பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், எம்எல்ஏ, எம்பி., கவுன்சிலர், ஊராட்சி தலைவர் போன்ற பதவிகளில் இருப்பவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய இயலாது. நிறுவனப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. ஒருவேளை மேற்கூறிய தகுதிகள் உடையவர்கள் நிதியை பெற்றுவந்தால், இந்த திட்டத்தில் இருந்து விலகி கொள்ளலாம்.
PM Kisan 19th Installment: தன்னார்வமாக விலகிக்கொள்ளலாம்
தன்னார்வமாக இந்த பலன்களை திருப்பி ஒப்படைப்பதற்கு PM-Kisan தளத்தில் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அதில் சென்று திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள விண்ணப்பிக்கலாம். அதன்பின் உங்களுக்கு இத்திட்டத்தின் நிதியும் வராது, அதன்பின்னர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கவும் இயலாது.
மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை இந்த விவசாயிகளுக்கு கிடைக்காது: காரணம் இதுதான்!!
மேலும் படிக்க | PM Kisan தொகை அதிகரித்தது: மாநில அரசு அதிரடி... இனி ரூ.9,000 கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ