MSME Credit Card Scheme: சிறு குறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதாவது சிறு குறு தொழில் செய்து வரும் வியாபாரிகளுக்கு 5 லட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டத்தினை சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு
இந்நிலையில் அந்த திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கு போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்த கிரெடிட் கார்டை சிறு குறு வியாபாரிகள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.
பிஎம் கிஷான் கிரெடிட் கார்டு
விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வகையில் மத்திய அரசின் பிஎம் கிஷான் கிரெடிட் கார்டு திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், அதே மாடல் போலவே இந்த திட்டத்திலும் மைக்ரோ கிரெடிட் முறை செயல்படுத்தப்பட இருக்கின்றது.
30,000 கோடி ரூபாய் நிதி
மேலும் இந்த திட்டத்திற்காக வரும் நாட்களில் 30,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் போவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. சிறு தொழில் செய்து வருபவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்காக 5 லட்சம் வரையும் இந்த திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் யார் பயன்பெற முடியும்?
சிறிய கடைகளை வைத்து நடத்துபவர்களும், சிறிய அளவில் ஆட்களை வைத்து நடத்தி வருபவர்களும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் கூட இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.
MSME கிரெடிட் கார்டு எத்தனை ஆண்டு வேலீட்டி?
ஆனால் அதற்கு முன்னதாக அவர்களது வங்கி கணக்கு அறிக்கை மற்றும் அவர்களது தொழிலின் தற்போதைய நிலை ஆகியவை ஆய்வு செய்யப்படும். மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய இந்த கிரெடிட் கார்டுகள் ஓர் ஆண்டுக்கு வரை வேலீட்டி கொண்டதாக் இருக்கும்.
மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டத்தில் யார் சேர முடியும்?
ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் ஈட்டும் சிறு குறு வியாபாரிகள் இந்த மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
MSME கிரெடிட் கார்டு வங்க எவ்வாறு விண்ணப்பிப்பது?
சிறு குறு தொழில் செய்து வியாபாரிகள் இந்த திட்டத்தில் சேர எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் (Udyam Registration Process) என்றால், முதலில் உத்தியோகபூர்வ இணையதளமான Udyam Registration (udyamregistration.gov.in) என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு இதுவரை எம்எஸ்எம்இ ஆக பதிவு செய்யப்படாத அல்லது இஎம்-II உள்ள புதிய தொழில்முனைவோருக்காக (For New Enterprise who are not Registered yet as MSME) என்ற பகுதிகள் தேர்வு செய்யவும். அதற்கு பிறகு உங்கள் ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிடவும். இதனைத்தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி (OTP) வரும். அதன்மூலம் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்.
பின்னர் உங்கள் வணிகத்தின் விவரங்களை பூர்த்தி செய்யவும். அதில் வணிகத்தின் பெயர், முகவரி மற்றும் தொழில் முனைவோர் விவரம் போன்றவை தேவைப்படும். அதன் பின்னர் புதிய உற்பத்தி மற்றும் விற்பனை வருமானம் உள்ள தகவல்களை பதிவு செய்து அனைத்து விவரங்களையும் சரிபார்த்து சமர்ப்பிக்கவும். உங்கள் விவரங்களை சமர்பித்த பிறகு உங்களுக்கான சான்றிதழ் ஆவணத்தை PDF வடிவில் உங்கள் முன் அஞ்சலில் பெற்றுக் கொள்ளலாம். இந்த பதிவு மூலம் உங்கள் வணிக விரிவாகத்திற்காக பல்வேறு தன்மைகள் மற்றும் உதவிகளை உங்களால் வர முடியும்.
மேலும் படிக்க - ரூ.1 லட்சம் வரை சம்பளம் உயரலாம்? 8வது ஊதியக்குழுவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்
மேலும் படிக்க - UPI மூலம் ரூ. 30,000 உடனடி கடன் வழங்கும் மத்திய அரசு! எப்படி பெறுவது?
மேலும் படிக்க - உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 236 பிடிக்கப்படலாம்! காரணத்தை தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ