இந்தியா 'மசாலாக்களின் நாடு' என்று அழைக்கப்படுகிறது. தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் (ISO) பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 109 மசாலாக்களில், சுமார் 75 மசாலாக்கள் இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. நமக்கு அடுத்தபடியாக துருக்கியும், பிறகு வங்காளதேசமும் உள்ளது.
நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஆச்சர்யம் அளிப்பவை என்றால், அது மிகையில்லை. இவற்றின் நறுமணம் இந்தியா முழுவதும் வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் பரவியுள்ளது. இந்நிலையில், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் ஆற்றலை அதிகமாக கொண்ட டாப் இந்திய மசாலாக்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. சீரகம்
இந்திய உணவு வகைகளில் சீரகம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் சுவை மற்றும் நறுமணம் உணவிற்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது. இது ரசம், காய்கறிகள் மற்றும் சட்னி வகைகளிலும், தாளிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. கொத்தமல்லி, மஞ்சள் அல்லது மிளகாய் போன்ற பிற மசாலாப் பொருட்களுடன் சீரகத்தைப் பயன்படுத்தினால், உணவிற்கு புதிய மற்றும் காரமான சுவையை கிடைக்கிறது. சீரகம் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு நன்மை (Health Tips) பயக்கும். மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட சீரகம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. வயிற்று உப்பிசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
2. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை சுவையை அதிகரிக்க மட்டுமல்ல, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. கொலஸ்ட்ராலை எரிக்கும் திறன் கொண்ட இது, மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சீரகத்தை போலவே, இதற்கு மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் திறன் உண்டு. எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
3. கருமிளகு
சமையலறையில் உள்ள மற்ற மசாலாப் பொருட்களை ஒப்பிடுகையில் கருமிளகு என்பது மருத்துவ குணங்களின் சுரங்கம். கருப்பு மிளகு "மசாலாக்களின் ராஜா" என்று அழைக்கப்படுகிறது. 10 கருமிளகு இருந்தால் போது பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என பழமொழி உண்டு. கருப்பு மிளகு சமையலில் பல வகையான உணவு தயாரிப்பில் முக்கிய மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், இது ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கருமிளகில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனை உட்கொள்வது உடல் எடையை குறைப்பதோடு, சருமத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். வறுத்த காய்கறிகள், வறுக்கப்பட்ட இறைச்சிகள் அல்லது வறுத்த முட்டைகள் மீது கருப்பு மிளகு தூவுவதன் மூலம் சுவையை அதிகரிக்கலாம். மேலும், கருமிளகினை சூப் மற்றும் சாஸ்களில் பயன்படுத்தப்படலாம்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய உணவுகள்!
4. கிராம்பு
கிராம்பு எண்ணற்ற ஆரோக்கிய பலன்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட மற்றொரு மசாலா. கிராம்புகளில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் பலவித கடுமையான நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. கிராம்புகளை தொடர்ந்து உட்கொள்வது பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இந்த மசாலா வாய் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இது பாக்டீரியாவை நீக்குகிறது மற்றும் பல்வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர கிராம்பு செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. நீங்கள் இதை இயற்கையான மவுத் ப்ரெஷ்னராகவும் பயன்படுத்தலாம்.
5. ஜாதிக்காய்
ஜாதிக்காய் சிறந்த சுவையைத் தருவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் எண்ணற்ற நன்மைகள் கொடுக்கக் கூடியது. ஜாதிக்காயை உட்கொள்வதால் தூக்க பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன் மன அமைதியும் கிடைக்கும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க | சுரைக்காய் உடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ