Weight Loss Journey: தற்போது உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். உடல் பருமன் பிரச்னையில் இருந்து விடுபட உணவுப்பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என தொடர்ச்சியான முயற்சிசெய்து உடல் எடையை குறைக்கின்றனர். இருப்பினும், தன்னிச்சையாக செயல்படுவதற்கு பதில் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்றுநர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனையின் பேரில் உடல் எடை குறைப்பில் ஈடுபடுவதே நல்லது.
Weight Loss Journey: நிதானமான உடல் எடை குறைப்பு
அந்த வகையில், மஹ்தாப் ஏகே (Mahtab Ekay) இன்ஸ்டாகிராமில் பிரபலமாக அறியப்படுகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் கொழுப்பு குறைப்பு பயிற்றுநர் (Fat Loss Coach) என குறிப்பிட்டுள்ளார். உடல் எடையை வேகமாக குறைப்பதில் நிதானம் காட்ட வேண்டியது அவசியம் என்பதே பல நிபுணர்கள் சொல்லும் விஷயமாக உள்ளது.
Weight Loss Journey: 3 மாதங்களில் 9 கிலோ எடை குறைப்பு
அந்த வகையில், மஹ்தாப் ஏகே 3 மாதக்கால தொடர்ச்சியான செயல்பாடு மூலம் 9 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்ற டிப்ஸை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு வீடியோக்களையும் அவர் பதிவிட்டு வருகிறார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட பதிவுகளை போட்டுள்ள இவருக்கு 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
Weight Loss Journey: மஹ்தாப் ஏகே சொல்லும் 7 முக்கிய விஷயங்கள்
அந்த வகையில் உடல் எடையை துரிதமாகவும், எளிமையாகவும் குறைப்பது குறித்த சில நாள்களுக்கு முன் மஹ்தாப் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர்,"நான் உடல் எடையை எளிமையாக குறைக்க வேண்டும் என நினைத்தால், இன்றே இந்த 7 விஷயங்களை செய்ய தொடங்குவேன்" என குறிப்பிட்டிருந்தார்.
- காலை உணவில் காய்கறிகள், புரதச்சத்து, கொழுப்பு ஆகியவை நிரம்பியிருக்கும்படி பார்த்துக்கொள்வேன். சுமார் 4-5 மணிநேரம் அது என்னை பசியில்லாமல் வைத்துக்கொள்ளும், இனிப்பு சாப்பிட வேண்டும், நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது.
- எல்லா வேளை உணவிலும் நார்ச்சத்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் 25-35 கிராம் நார்ச்சத்தை உட்கொள்ளுங்கள். ஆப்பிள்கள், பருப்புகள், ஓட்ஸ், முழு தானிய பிரெட்கள், பேரிக்காய், கொண்டைக்கடலை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.
- வெறும் வயிற்றில் ஸ்நாக்ஸ் சாப்பிடாதீர்கள். அதாவது, வெறும் வயிற்றில் கார்போஹைரேட்ஸ் சேர்ப்பது நல்லதல்ல. வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவதற்கு பதில் உணவுக்கு பின்னர் சற்று இனிப்பு சாப்பிடுவது நல்லது.
- தினமும் காலையில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சாப்பாட்டுக்கு பின்னர் இரண்டு முறை 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். மாலையில் 30-40 நிமிடங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் 10 ஆயிரம் Steps நடப்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
- முடிந்தளவிற்கு நன்றாக தண்ணீர் அருந்துங்கள். தொடர்ச்சியாக தண்ணீர் அருந்துங்கள். காலையில் பெரிய வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதனை ஒரு நாள் முழுவதும் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- அதிக புரதச்சத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக புதிது புதிதாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. முட்டையின் வெள்ளை பகுதியை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். சிக்கனின் மார்பு பகுதியை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். சான்ட்விச் சாப்பிட்டால் காட்டேஜ் சீஸ் பயன்படுத்தலாம்.
- வேண்டுமென்றால், தினமும் உங்களுக்கு பிடித்த இனிப்பு பதார்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம். அதாவது உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு ஸ்வீட்டை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை தவிர்க்கலாம். கடலைமிட்டாய், பிரட் அல்வா போன்றவற்றை சேர்க்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் மஹ்தாப் ஏகேவின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 25 கிலோவை குறைத்த டாக்டர்... அதுவும் 42 நாள்களில் - கொழுப்பை கரைக்க என்ன செய்தார்?
மேலும் படிக்க | 150 கிலோவில் இருந்த பெண்... 86 கிலோவை குறைத்தது எப்படி? 5 முக்கிய டிப்ஸ்
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் 12 கிலோ... படுவேகமாக எடையை குறைத்த பெண் - எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ