ED Seizes Director Shankar Assets: பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"சென்னை மண்டல அலுவலகத்தில் உள்ள அமலாக்க இயக்குநரகம் கடந்த பிப்.17ஆம் தேதி அன்று பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) விதிகளின் கீழ், எஸ். சங்கர் (S Shankar) பெயரில் பதிவு செய்யப்பட்ட சுமார் ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது" என்றார்.
2011ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அன்று இயக்குநர் ஷங்கருக்கு எதிராக சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த புகாரில்,"சங்கர் இயக்கிய எந்திரன் (இந்தியில் ரோபோ) திரைப்படத்தின் கதைக்களம் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜிகுபா என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.
ED, Chennai has provisionally attached 3 immovable properties registered in the name of S. Shankar, with a total value of Rs.10.11 Crore (approx.) on 17/02/2025 under the provisions of PMLA, 2002.
— ED (@dir_ed) February 20, 2025
இந்நிலையில், அமலாக்கத்துறையின் விசாரணையில் இயக்குநர் சங்கர் ரூ.10.11 கோடி ஊதியம் பெற்றதாக தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்,"எந்திரன் திரைப்படத்திற்கான கதை மேம்பாடு, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பன்முக பங்களிப்புகளுக்காக 11.5 கோடி ரூபாய் அவர் வருமானம் பெற்றுள்ளார். மேலும், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) சமர்பித்த விசாரணை அறிக்கையில், ஜிகுபா கதைக்கும் எந்திரன் திரைப்படத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. கதை அமைப்பு, கதாபாத்திர மேம்பாடு மற்றும் கருப்பொருள் கூறுகளை ஆய்வு செய்த இந்த அறிக்கை, ஷங்கர் மீதான இந்த பதிப்புரிமை விதிமீறல் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது அளிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைவசம் உள்ள கணிசமான ஆதாரங்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில், எஸ். ஷங்கர் பதிப்புரிமைச் சட்டம், 1957இன் பிரிவு 63-ஐ மீறியதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இப்போது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002இன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்த மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமலாக்கத்துறை அதன் அறிக்கையில்,"ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த 'எந்திரன்' (ரோபோ) திரைப்படம் உலகளவில் ரூ. 290 கோடி வசூலித்தது. அந்த நேரத்தில் அது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்தது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | விஜய்-சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர்..இப்போ இப்படி ஆயிட்டாரே! வைரலாகும் வீடியா...
மேலும் படிக்க | இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாகும் 7 படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ