EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வசதிகளை அதிகப்படுத்தவும், செயல்முறைகளை எளிதாக்கவும் பல வித புதிய விதிகளை அமைத்து வருகின்றது, பழைய விதிகளிலும் மாற்றங்களை செய்து வருகின்றது. அந்த வரிசையில், தற்போது உறுப்பினர்களுக்கு ஒரு புதிய வசதி கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு புதிய வசதி
யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தளங்கள் மூலம் இபிஎஃப் சந்தாதாரர்களின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) க்ளெம்களை செயலாக்கவும், அதன் மூலம் இபிஎஃப் நிதியை சுமூகமாக பரிமாற்றம் செய்யவும் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
EPF Subscribers: 2-3 மாதங்களில் இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அடுத்த குட் நியூஸ்
EPFO இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு வரைபடத்தை தயாரித்துள்ளதாகவும், அடுத்த 2-3 மாதங்களில் UPI-தளங்களில் இந்த அம்சத்தை வெளியிட இந்திய தேசிய கட்டணக் கழகத்துடன் (NPCI) கலந்துரையாடி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
EPFO அதன் செயல்திறனை மேம்படுத்தவும் அதன் 7.4 மில்லியன் சந்தாதாரர்களுக்கு அணுகலை அதிகரிக்கவும் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களில் UPI உடனான ஒருங்கிணைப்பும் ஒன்றாகும். EPF UPI உடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் தங்கள் க்ளெய்ம் தொகையை டிஜிட்டல் வாலட் மூலம் எளிதாக அணுக முடியும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Reserve Bank of India: ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணிபுரியும் இபிஎஃப்ஓ
வணிக வங்கிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடன் இணைந்து, தொழிலாளர் அமைச்சகம் EPFO இன் டிஜிட்டல் அமைப்புகளை புதுப்பித்து வருகிறது. இது பணத்தை எடுப்பதை எளிதாக்கவும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும்.
கடந்த ஆறு-ஏழு மாதங்களில், இபிஎஃப் செயல்முறைகளை எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துதல், வருங்கால வைப்பு நிதிக்கான (PF) கோரிக்கை செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை EPFO மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மில்லியன் கணக்கான EPF உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சேவை வழங்கலில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. மேலும் எதிர்காலத்தில் இன்னும் பல வித மேம்பாடுகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
EPFO Claim Settlements: சாதனை ஆளவில் க்ளெய்ம் செட்டில்மெண்ட்
இதுவரை நிதியாண்டு 2025 -இல், EPFO 50 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை செட்டில் செய்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.2.05 லட்சம் கோடிக்கு மேலான தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதியாண்டு 2024 -இல், EPF ரூ.1.82 லட்சம் கோடி மதிப்புள்ள 44.5 மில்லியன் க்ளெய்ம்களை செட்டில் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மூன்று நாட்களுக்குள் செயல்படுத்தப்பட்ட ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட்கள், நிதியாண்டு 2025 -இல் 18.7 மில்லியனாக இரட்டிப்பாகின. இது நிதியாண்டு 2024 இல் 8.95 மில்லியனாக இருந்தது.
இந்த மாத தொடக்கத்தில், எளிமைப்படுத்தப்பட்ட பரிமாற்றக் க்ளெய்ம் விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பரிமாற்றக் கோரிக்கைகளில் 8% மட்டுமே உறுப்பினர் மற்றும் முதலாளி / நிறுவன சான்றளிப்பு தேவைப்படுகிறது என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியிருந்தார். குறிப்பாக, சுமார் 48% க்ளெய்ம்கள் முதலாளியின் / நிறுவனத்தின் தலையீடு இல்லாமல் உறுப்பினர்களால் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. 44% பரிமாற்றக் க்ளெய்ம்கள் தானாகவே உருவாக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | SBI Mutual Fund: ₹250 மாத முதலீட்டை ₹78 லட்சமாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ