Quitting smoking Benefits Tamil | புகைப்பழக்கம் ஆரோக்கியத்துக்கு மிக மிக கேடான விஷயம். இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடலின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் புகைப்பிடிப்பதால் சேதமடைந்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமல்ல புகைப்பழக்கம் ஒரு மோசமான மனநோயையும் ஏற்படுத்திவிடும். புகைப்பிடிக்கும் பழக்கம் காலப்போக்கில் ஒரு போதையாகிவிடும். குறிப்பிட்ட நேரத்துக்கு புகைப்பிடிக்காவிட்டால் ஒருமாதிரியான சூழலுக்கு தள்ளபடுவீர்கள். இப்பழக்கம் இருப்பவர்களை கவனித்தால் தெரியும். ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் சிகரெட், பீடி புகைப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை எல்லாம் போதை மறுவாழ்வு மையங்களால் கூட இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை.
முதலில் மனரீதியாக புகைப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்தால்தான் உடல் ரீதியாக புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியும். அந்தவகையில் ஒருவர் புகைப்பழகத்தை விட்டால் அவரின் இதயம் மற்றும் நுரையீரல் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உண்மையில் புகைப்பழகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீள ஆண்டுக்கணக்கில் கூட ஆகலாம்.
புகைபிடிப்பதை விட்ட பிறகு ஆரோக்கியம் மேம்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திடீரென புகைப்பழகத்தை நிறுத்தாமல் பகுதி பகுதியாக நிறுத்த வேண்டும். இதுவும் ஒருவகையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க தான். புகைபிடித்தல் நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தில் ஆழமான விளைவைக் கொண்டிருக்கிறது என்பதால், புகைப்பழகத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குணமடைய நீண்ட நேரம் ஆகலாம்.
ஒருவர் புகைபிடிப்பதை விட்ட பிறகு, இதய ஆரோக்கியம் இயல்பு நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கொரியா பல்கலைக்கழகத்தின் எம்.டி., பி.எச்.டி., சியுங் யோங் ஷின் நடத்திய இந்த ஆய்வில், 5.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அதில், புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஒரு நபரின் புகைபிடித்தல் வரலாறு, முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஒருவர் நீண்ட காலமாக புகைபிடித்து வருவதால், புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் அவரது உடல்நலம் மேம்படும் வாய்ப்பு அதிகம்.
புகைபிடிப்பதால் ஏற்படும் இதய நோய்களின் ஆபத்து உடனே குறைந்துவிடுவதில்லை. லேசான புகைப்பிடிப்பவர்கள் 5 முதல் 10 ஆண்டுகளில் புகைபிடிக்காதவரின் இதய ஆரோக்கியத்தைப் போன்றே இருக்க முடியும். அதேசமயம், 30 ஆண்டுகளாக தினமும் ஒரு சிகரெட் புகைத்தவர்களுக்கு, இந்த முன்னேற்றம் ஏற்பட 25 ஆண்டுகள் ஆகுமாம்.
ஒரு சிகரெட் கூட ஆரோக்கியத்திற்கு ஆபத்தை கொடுக்கக்கூடியதே. நீங்கள் ஒரு நாளைக்கு பல முறை சிகரெட் புகையை சுவாசிக்கும்போது, நுரையீரல் மற்றும் இதயத்தில் கழிவுகள் சேரத் தொடங்குகிறது. இது நிலக்கரி அல்லது மரம் போன்ற கரிமப் பொருட்களை எரிக்கும்போது வெளியேறும் ஒரு வகையான ஒட்டும் கழிவு. இந்த கழிவு நீங்க பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே பொறுமையாக இருப்பது முக்கியம்.
மேலும் படிக்க | 123 கிலோ இருந்த இன்ஸ்டா பிரபலம்... 48 கிலோ உடல் எடையை குறைக்க உதவியது என்ன?
மேலும் படிக்க | வெயிட் குறைக்க சிம்பிளான 4 வழிகள்! டாக்டர் ஷர்மிகா சொன்ன டிப்ஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ