IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் லீக் தொடரில் கடும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி நாளை நடைபெறுகிறது.
IND vs PAK: பாகிஸ்தான் தலையின் மீது தொங்கும் கத்தி
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான ஒன்றாகும். பாகிஸ்தான் அணி ஏற்கெனவே நியூசிலாந்திடம் தோல்வியடைந்துவிட்டது. இதனால், அந்த அணியின் தலையின் மீது ஒரு கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது எனலாம். காரணம், இந்தியா போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி தொடரைவிட்டு வெளியேற நேரிடும். கடைசியாக வங்கதேசத்துடன் ஒரு சம்பிரதாய போட்டியில் மட்டுமே விளையாட முடியும்.
IND vs PAK: இந்திய அணிக்கும் முக்கியமான போட்டியாகும்
மறுபுறம் இந்திய அணியோ வங்கதேசத்தை வீழ்த்தி ஓரளவுக்கு சௌகரியமாக உள்ளது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்தால், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அழுத்தம் அதிகமாகிவிடும். எனவே பாகிஸ்தானை வீழ்த்திவிட்டால் அரையிறுதி இடத்தையும் உறுதிசெய்து, நியூசிலாந்தை இன்னும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம். நியூசிலாந்து நம்பிக்கையுடன் எதிர்கொள்வது நாக்அவுட் சுற்றுக்கும் இந்திய அணியை தயார்படுத்தும்.
IND vs PAK: குல்தீப்புக்கு பதில் வருண் வேணுமா?
அந்த வகையில், இந்திய அணி பாகிஸ்தான் போட்டியையும் ஒரு நாக்-அவுட் போட்டியாக பார்த்து விளையாட வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் வல்லுநர்கள். நீங்கள் நாக்அவுட் போட்டியில் விளையாடினால் தரமான காம்பினேஷனில்தான் விளையாட வேண்டும். அதேபோல், இந்தியாவும் தரமான காம்பினேஷனை கண்டடைய வேண்டும். தற்போதைய அணியில் பலரும் எதிர்பார்க்கும் மாற்றம் குல்தீப் யாதவிற்கு பதில் வருண் சக்ரவர்த்தி...
IND vs PAK: அர்ஷ்தீப் சிங்கை சேர்க்க வேண்டும் - ஏன்?
ஆனால், குல்தீப் யாதவிற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்கலாம். மாறாக, இந்திய அணியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகிய இருவரே நட்சத்திர பேட்டர்கள். அவர்கள் இருவரும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலவீனங்களை வைத்துள்ளனர்.
அப்படியிருக்க, இந்திய அணி பாகிஸ்தானை வெல்ல வேண்டும் என்றால் அர்ஷ்தீப் சிங்கை விளையாட வைக்க வேண்டும் என பலரும் கருதுகின்றனர். புதுபந்தில் மட்டுமின்றி டெத் ஓவர்களிலும் அர்ஷ்தீப் சிங்கின் யார்க்கர் இந்திய அணிக்கு உதவும்.
ஷமி கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தாலும் ஒருவேளை அவர் ஒருபுறம் அதிக ரன்களை கொடுத்தால், மறுமுனையில் அர்ஷ்தீப் சிங்கால் கட்டுப்படுத்த இயலும். எனவே, பாகிஸ்தான் போட்டியில் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ