Union Budget 2025: இன்னும் சில நாட்களில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பட்ஜெட் குறித்து பல துறைகளை சார்ந்தவர்களுக்கு பல வித எதிர்பாப்புகள் உள்ளன.
Budget 2025 Expectations
வருமான வரி முறையில் சாத்தியமான மாற்றங்கள் வரும் என வரி செலுத்துவோர் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்கு வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையிலேயெ முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது. 2014 முதல் வரி பொறுப்பு ரூ.1.5 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது. பழைய வரி முறையின் கீழ் வரி செலுத்துவோருக்கு இந்த ஏற்பாடு மூலக்கல்லாக பார்க்கப்படுகின்றது.
What is Section 80C: பிரிவு 80C என்றால் என்ன?
பிரிவு 80C, வரி செலுத்துவோர் முதலீடுகள் மற்றும் தகுதிவாய்ந்த செலவினங்களில் ஒரு நிதியாண்டுக்கு ரூ.1.5 லட்சத்தை முதலீடு செய்து, அதன் மூலம் வரிக்குட்பட்ட வருமானத்தை குறைக்க உதவுகிறது. இதற்கு தொடர்புடைய வகைகளின் பட்டியல் இதோ.
முதலீடுகள்:
- ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் (ELSS)
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
- தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC)
- பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) தன்னார்வ பங்களிப்புகள்
- சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)
- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS)
- ஐந்தாண்டு வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை (FD)
- யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் (ULIPகள்)
செலவுகள்:
- இரண்டு குழந்தைகள் வரை கல்விக் கட்டணம்
- வீட்டுக் கடன் அசல் திருப்பிச் செலுத்துதல்
- ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள்
- தேசிய ஓய்வூதிய முறை (NPS) போன்ற ஓய்வூதியத் திட்டங்களுக்கான பங்களிப்புகள்
Taxpayers: வரி செலுத்துவோருக்கு பிரிவு 80C வரம்பில் அதிகரிப்பு ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது?
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரம்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மாறாமல் அப்படியேதான் உள்ளது. பொருளாதார யதார்த்தங்களுக்கு ஏற்ப அதிக சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க இந்தத் தேவையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Budget 2025: 2025 பட்ஜெட் மாற்றங்களைக் கொண்டு வருமா?
இந்த பட்ஜெட்டில் பிரிவு 80C வரம்பை அதிகரிப்பது வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் இருவரின் மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. எனினும், இது செய்யப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை. இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டால், அது தனிநபர்கள் மீதான நிதி அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், தேசிய சேமிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கும்.
பட்ஜெட்டுக்கு முன் நன்மைகளை அதிகப்படுத்துவது எப்படி?
பொதுவாக பெரிய அளவிலான மாற்றங்கள் அறிவிக்கப்படும் வரை, வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் முதலீடுகளைச் செய்வதிலும், அவர்களின் வருமான வரி வருமானத்தை (ITR) துல்லியமாக தாக்கல் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டுச் சான்றுகள் போன்ற துணை ஆவணங்கள், சுமூகமான விலக்கு க்ளெய்ம்களை உறுதி செய்வதற்கு மிக முக்கியமானவை. 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், நிதிப் பொறுப்புக்கும் தனிநபர் நிவாரணத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களுக்காக நாடு காத்திருக்கிறது. பிரிவு 80C வரம்பில் மாற்றம் ஏற்பட்டால், அது இந்த சமநிலையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | EPF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது? தெரிந்துகொள்ள சுலபமான 4 வழிகள் இதோ
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் 2 பரிசு: ஊதியம், ஓய்வூதியத்தில் மெகா ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ