நுரையீரல் பாதிப்பு முதல் மூட்டு வலி வரை.. நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீங்க

தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 12, 2025, 12:31 PM IST
  • நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள்.
  • பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் பழக்கம்.
  • உடலில் நச்சுகள் மற்றும் அஜீரணத்தை அதிகரிக்கிறது.
நுரையீரல் பாதிப்பு முதல் மூட்டு வலி வரை.. நின்று கொண்டு தண்ணீர் குடிக்காதீங்க title=

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உடலின் நீர் சத்து குறையாமல் இருப்பதற்கும் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், சிறந்த ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழியையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். 

குடிநீர் அருந்தும் பழக்கத்தைப் பொறுத்தவரை, நாம் அனைவரும் நின்று கொண்டே குடிப்பது சரியான வழி அல்ல என்றும், உட்கார்ந்த நிலையில் இருக்கும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒரு முறையாவது உங்களுக்கு நினைவூட்டியிருக்கலாம். மருத்துவர்களும் தண்ணீரை உட்கார்ந்து கொண்டு தான் குடிக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து விரிவாக இங்கே அறிந்து கொள்ளலாம்

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது சரியான வழி அல்ல. ஏனெனில் அது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நின்று கொண்டே உங்கள் உடலும் திசுக்களும் அழுத்தத்தை சந்திப்பதோடு, இது உங்கள் உடலில் தண்ணீர் வேகமாகப் பாய வழிவகுக்கிறது. இதனால் உடலின் திரவ சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள்:

1. மூட்டுவலி

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும்போது நரம்புகள் பாதிக்கப்பட்டு,திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து, உடலில் நச்சுகள் மற்றும் அஜீரணத்தை அதிகரிக்கிறது. மேலும், இது மூட்டுகளில் திரவங்களை குவிய காரணமாகி, மூட்டுவலியைத் தூண்டுகிறது. இதனால், மூட்டுவலி பிரச்சினைகள் மற்றும் மூட்டு சேதம் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

2. நுரையீரல் பாதிப்பு

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும்போது, ​​தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கல்லீரல் மற்றும் செரிமானப் பாதையை அடைவதில்லை. நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும்போது, ​​அது உங்கள் உடலின் வழியாக மிக வேகமாகப் பயணிக்கிறது. இதனால் உங்கள் நுரையீரல் மற்றும் இதய செயல்பாட்டில் இடையூரை ஏற்படுத்தி ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் நுரையீரலுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு பாதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | சிக்கன் vs மட்டன் எது உடலுக்குச் சிறந்தது? அதிகமாகச் சாப்பிட வேண்டியது எது..குறைவாகச் சாப்பிட வேண்டியது எது!
 
3. அஜீரணம்

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பை சீர்குலைக்கும். ஏனென்றால், நின்று கொண்டே தண்ணீர் குடிக்கும்போது, ​உணவுக் குழாய் வழியாக மிகுந்த சக்தியுடனும் வேகத்துடனும் சென்று கீழ் வயிற்றில் நேரடியாக விழுகிறது. நரம்புகள் இறுக்கமடைவது திரவங்களின் சமநிலையை சீர்குலைத்து, உடலில் நச்சுகள் மற்றும் அஜீரணத்தை அதிகரிக்கிறது.”

4. சிறுநீரக பிரச்சினை

உட்கார்ந்திருக்கும் போது நமது சிறுநீரகங்கள் சிறப்பாக வடிகட்டப்படுகின்றன என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. “நின்று தண்ணீர் குடிக்கும் போது, ​​திரவம் அதிக அழுத்தத்தின் கீழ் வயிற்றுக்கு எந்த வடிகட்டுதலும் இல்லாமல் செல்கிறது. இதனால், நீர் அசுத்தங்கள் சிறுநீர்ப்பையில் படிந்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டை சேதப்படுத்துகிறது. இது சிறுநீர் பாதை கோளாறுகளை கூட ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தண்ணீர் குடிக்க சரியான வழி 

தண்ணீர் குடிப்பதற்கான சரியான வழி, அமர்ந்து தண்ணீர் குடிப்பது. மேலும், குடிக்கும்போது முதுகை நேராக நிமிர்த்தி வைத்திருக்க வேண்டும். இந்த வழியில், ஊட்டச்சத்துக்கள் மூளையை அடைந்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இது மட்டுமல்லாமல், உங்கள் செரிமானம் மேம்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் மசாலா நீர்: குடிச்சு பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News