Skin Care, Aging | தோலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து ஒருவரின் வயதை கணித்துவிடலாம். ஒவ்வொரு வயதுக்கு ஏற்றார்போல் தோலில் நிறம் மாறுபடும், சுருக்கங்கள் உருவாகும், பளபளப்பு குறையும். ஆனால் இன்றைய தேதியில் பல்வேறு காரணங்களால் இளம் வயது நபர்கள் கூட வயதானவர்கள் போல் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாறுபாடு, உணவு பழக்க வழக்கம் மற்றும் வேலையாகும்.
வெளியில் செல்லும்போது காற்றில் இருக்கும் மாசு தோலில் படிந்து சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. போதிய கவனம் செலுத்தினால் இத்தகைய அழகியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும். அழகியல் நிபுணர் ஒருவர் பேசும்போது, இன்றைய காலத்தில் 20 வயதான இளைஞர்களுக்கு தோல் சார்ந்து அதிக பிரச்சனைகள் சந்தித்து வருவதாகவும், 80 வயதானவர்களுக்கு தோலில் ஏற்படும் சுருக்கங்கள், மற்றும் தோல் பிரச்சனைகள் அவர்களிடம் காணப்படுவதாகவும் கூறுகிறார். நாம் ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்கள் தான் இளம் வயதினர் சந்திக்கும் தோல் பிரச்சனைகளுக்கு அடிப்படை என சுட்டிக்காட்டுகிறார்.
உலகளவில் அழகு சந்தையில் காணப்படும் ஹைலூரோனிக் அமிலங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் வயதான தோற்றத்தில் இருந்து விடுபட முடியும் எனக் கூறும் அழகியல் நிபுணர்கள், 20 வயதில் இருந்தே சன்ஸ்கிரீன் பயன்படுத்த தொடங்க வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். லேசர் மற்றும் முக அழகு தொடர்பான சில சிகிச்சைகள் மூலம் வயதான தோற்றத்துக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
20 வயதில்...
வயதான தோற்றம் இருந்தால் அதற்காக தோல் பராமரிப்பு கிரீம்களை வழக்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, 20 வயதில் ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நிகழும். அப்போது, முகப்பரு, பிளாக்ஹெட்ஸ், எண்ணெய் மற்றும் மந்தமான தோல் அமைப்பு உடலில் உருவாகும். இந்த சமயத்தில் பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு மேக்கப்பை நீக்கிவிட்டு முறையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். இதனை முறையாக செய்யவில்லை என்றால் நிறமி மற்றும் பிளாக்ஹெட்ஸ் பிரச்சனைகள் முன்பை விட அதிகமாகிவிடும்.
சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். பெரும்பாலானோர் பயன்படுத்தினாலும், முறையாக பயன்படுத்துவதில்லை எனக் கூறப்படுகிறது. சூரியனின் கதிர்வீச்சால் தோல்களில் வறட்சி, வெடிப்பு, அரிப்பு ஆகியவை உண்டாகி, அழகியல் பாதிப்பை ஏற்படுத்தும். அப்போது, நீங்கள் தரமான சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறீர்களா? என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உபயோகிக்கும் சன்ஸ்கிரீன் UVA மற்றும் UVB கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறதா? என்பதை, கிரீம் உள்ளடக்கத்தில்(Description) -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 20 வயதில் வரக்கூடிய ஹார்மோன் மாற்றங்களால் தோல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும். இதனை சாதாரணமாக கடந்து செல்லாமல், உடனடி கவனம் செலுத்தி அந்தப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வரவேண்டும். மேலும், தோல் நிபுணர்களிடம் சென்று முறையான ஆலோசனை பெற்றுக்கொள்ளவது நல்லது
30 வயதில்....
நடுத்தர வயதில் இருக்கும் நீங்கள் இளமை வயதைக் காட்டிலும் கூடுதலான அக்கறையை இப்போது செலுத்த வேண்டியிருக்கும். தொற்றுநோய்கள் உள்ளிட்டவை ஏற்படும் என்பதால் ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தோல் நிபுணர்களை சந்தித்து அழகியல் பிரச்சனைகள், தொடர்ந்து இருக்கும் தோல் பிரச்சனைகளுக்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். சரியான அழகியல் கிரீம்களை உபயோகப்படுத்து அவசியம். இல்லையென்றால் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட நேரிடும்.
40 வயதில் ...
40 வயதாகும்போது ஹைட்ரேஷன் குறைபாடு காரணமாக உடலில் சுருக்கங்கள் ஏற்படத் தொடங்கும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தலாம். ஆனால், முன்கூட்டியே இதனை கவனித்து உயர்தர சிகிச்சை எடுத்துகொண்டால் சுருக்கங்கள் ஏற்படாது. அதாவது, ஹைலுரோனிக் அமிலத்தை உடலில் செலுத்துவதன் மூலம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த வயதைப் பொறுத்தவரை அழகு என்பது ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கும். முதலில், உடல் எடையில் கவனம் செலுத்த வேண்டும். உடல் அமைப்பு மற்றும் எடை சீராக இருந்தால், பார்ப்பதற்கு அழகாக இருப்பீர்கள்.
40 வயதில் உடல் அமைப்பை மாற்றுவது என்பது சவாலான விஷயம் என்பதால், 20 வயதில் இருந்து கவனம் செலுத்தி வர வேண்டும். நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதய வால்வு பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதால், அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூடுதலாக ஆரோக்கியத்துக்கு கொடுக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்கு இருந்தால் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் அழகியல் நிபுணர்களை பார்த்து, அவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | டாக்ஸிக் அலுவலகத்தில் செய்யவே கூடாத 5 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க | போகி அன்று ‘இந்த’ 7 பொருட்களை எரிக்கவே கூடாது!! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ