World Bizarre Latest News In Tamil: பிரேசில் நாட்டின் தலைநகர் பிரேசிலியாவிற்கு அருகில் இருக்கும் சமம்பாயா என்ற பகுதியில் மாட்டுக் கொட்டகைக்கு அருகே 45 வயதான ஒருவர் சுயநினைவு இன்றி கிடப்பதை அப்பகுதியினர் கண்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் குறிப்பாக, அந்த நபர் தனது பிறப்புறப்பில் ஆணுறை அணிந்திருந்ததாகவும், அவர் மயக்கமடைந்து இருந்த இடத்திற்கு பின்னே அந்த ஆணுறையின் கவரும் கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. வினோதமான இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பால் கறக்க சென்ற பணியாளர்
அங்குள்ள லாஜே டா ஜிபோயா என்ற கிராமப் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் அந்த நபர் பணியாற்றி, அங்குதான் வசித்தும் வந்துள்ளார். வினோதமான அந்த சம்பவம் கடந்த புதன்கிழமை அன்று (ஜன. 8) நடந்ததாக கூறப்படுகிறது. தினமும் காலை 5 மணிக்கு எழுந்து அந்த பண்ணையில் இருக்கும் பசு மாடுகளில் இருந்து பால் கறந்து, அவரது முதலாளியின் காலை காபிக்கு அந்த பாலை கொடுக்க வேண்டுமாம். இதுதான் காலையில் அவரின் அன்றாட வேலையாக இருந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் இரவு உயிரிழந்த நபரும், பண்ணையில் பணியாற்றும் மற்றொரு நபரும் சேர்ந்து மது குடித்துள்ளனர்.
அந்த வகையில், சம்பவம் நடந்த அன்று நல்ல மது போதையில் அதிகாலை 5 மணிக்கு எழுந்து அந்த நபர் பால் கறக்க சென்றிருக்கிறார் என்றும் நீண்ட நேரமாகியும் அந்த நபர் பாலை கொண்டுவராத நிலையிலேயே அவரை தேடி மாட்டுக் கொட்டகைக்கு இன்னொரு பணியாளர் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து.. 20 வருடங்களுக்கு முன்பே கணித்த 'The Simpsons'!
பசு மாடு விட்ட உதை
பணியாளர் அந்த நபரை கண்டடைந்த போது, ஒரு பசுவுக்கு பின்னால் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாகவும், அவரை அங்கிருந்து இழுந்த போதே அவரது பிறப்புறுப்பில் ஆணுறை போட்டுள்ளதை தான் பார்த்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையில் அங்கிருந்த பசுக்களில் ஒன்று அந்த நபரின் தலையில் பலமாக மிதித்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், அந்த நபர் பசுவிடம் உடலுறவு மேற்கொள்ள முயற்சித்திருக்கலாம் என்றும் அப்போது பசு அவரை உதைத்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
குறிப்பாக, அந்த ஆணுறையே இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. அவருக்கு அவசர உதவி அளிக்க வந்த மருத்துவ பணியாளர்கள் கூறுகையில், தாங்கள் முதலில் அவரை சோதித்தபோது அவர் உயிருடன் இருந்ததாகவும், எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற இயலவில்லை என்றும் கூறினர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
இதை போன்ற வினோத சம்பவங்கள்
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகர் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் பணியாற்றும் ஒருவர் ஆட்டுடன் உடலுறவு மேற்கொள்ள முயற்சித்ததாக கூறி கைது செய்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. 43 வயதான அந்த நபர், ஆட்டுடன் ஒரு வினோதமான நிலையில் பிடிப்பட்டதை தொடர்ந்து அவர் மீது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தாய்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவில் இருந்து வந்த சுற்றுலா பயணி ஒருவர் பசுவுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்ததாக கூறி போலீசாரிடம் பிடிபட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ