Planet Transits: கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய ராசியை மாற்றும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கிரகங்களின் பெயர்ச்சியின் போது பல்வேறு யோகங்கள் உண்டாகும். இவை பலவித சுப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவை.
வாழ்க்கையில் சகலவிதமான செல்வங்களுக்கும், செழிப்புக்கும் அள்ளிக் கொடுப்பவர் சுக்கிர பகவான். சுக்கிரன் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது அனைத்து ராசிகளுக்குமே ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராஜயோகங்கள்: சுக போக வாழ்க்கையையும் செல்வத்தையும் அள்ளித் தரும் ராஜயோகங்களில், லட்சுமி நாராயண ராஜயோகம், பத்ரா ராஜயோகம், ஹம்ச ராஜயோகம், சச மகாபுருச ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் என ஐந்து ராஜயோகங்கள் அடங்கும்.
மாளவ்ய ராஜயோகம்: ராஜ யோகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, சக்தி வாய்ந்ததாக, அதிர்ஷ்ட பலன்களை அள்ளித்தரக்கூடியதாக மாளவ்ய ராஜயோகம் கருதப்படுகிறது. ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிர பகவான் பெயர்ச்சி காரணமாக மாளவ்ய ராஜயோகம் ஏற்படுகிறது.
சுக்கிரன் பெயர்ச்சி 2025: நவகிரகங்களில், அசுரர்களின் அதிபதியான சுக்கிரன் ஜனவரி 28ம் தேதி காலை 6.42 மணிக்கு மீன ராசியில் பிரவேசிக்கிறார். சுக்கிரன் குரு பகவானின் ராசிக்குள் செல்வதால் மாளவ்ய ராஜ்யயோகம் உருவாகிறது.
அதிர்ஷ்ட ராசிகள்: 2025 ஆண்டின் முதல் மாதத்தில், மாளவ்ய ராஜயோகம் உருவாகும் போது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அபர்தமாக இருக்கும். அவர்களுக்கு கை நிறைய பணம், நிம்மதியான வாழ்வு வேலையில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் அதிக பலன் பெரும் ராசிகளை தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்: மாளவ்ய ராஜயோகம் உருவாகுவது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். வருமானத்தில் நல்ல உயர்வும், பொருள் வசதிகளும் கூடும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறலாம். புதிய சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பும் கூடும்.
தனுசு : மாளவ்ய ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். புதிய வாகனம், புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கும்பம்: மாளவ்ய ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும். திடீர் பண வரவால் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் பேச்சுத்திறன் மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, ஆடம்பரங்கள் என அனைத்து வசதிகளையும் பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.