பென்ஷன் என்னும் ஓய்வூதியம் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டான SIP இதற்கு கை கொடுக்கும்.
SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டு சாமான்ய மக்களுக்கான முதலீட்டு திட்டங்களீல் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. பங்கு சந்தையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதுகாப்பானது. இதில் தவறாமல் தொடர்ந்து நீண்ட காலம் முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
ஓய்வூதியம் இல்லாதவர்கள் ஓய்வு காலத்தில் நல்ல வருமானம் அதாவது லட்சங்களில் மாத வருமானம் பெறுவதற்கு, சம்பாதிக்கும் காலத்தில் இருந்தே முறையாக திட்டமிட்டு சிறந்த முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். நிலையான, நீண்ட கால முதலீடு பெரிய அளவில் நிதியை உருவாக்க உதவும்
SIP என்னும் மியூச்சுவல் ஃபண்ட்: வழக்கமான எஃப்டி, ஆர்டி முதலீடுகளை விட ஆயிரத்தை கோடிகளாக்கும் SIP என்னும் மியூச்சுவல் ஃபண்ட், சாமானியர்களுக்கான சிறந்த முதலீடாக உள்ளது. பங்கு சந்தையுடன் ஒப்பிடுகையில் மிகவும் பாதுகாப்பானது.கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதால் பணம் பன்மடங்காகும்.
சிறந்த வருமானம்: சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். இதற்கு முக்கிய காரணம் இதி கிடைக்கும் ஆண்டு வருமானம் மற்றும் கூட்டு வட்டியின் பலனைக் கொண்ட வருமானம். பரஸ்பர நிதியம் சாமான்யர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கும் வல்லமை படைத்தது.
சராசரி ஆண்டு வருமானம்: பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக 12 % - 15% சதவிகித ஆண்டு வருமானம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும், சிறந்த பரஸ்பர நிதியங்கள், 20% முதல் 30% வரை கூட ஆண்டு வருமானத்தை வழங்கியுள்ளன என சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
SWP: குறிப்பிட்ட காலம் வரை SIP மூலம் தொடர்ந்து முதலீடு செய்து வந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு, பணத்தை முதலீடு செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது, அதனை SWP என்னும் முறையான திரும்பப் பெறும் திட்டமாக ஆக்கி, அதன் மூலம் லட்சங்களில் வருமானம் பெறலாம்.
உதாரணத்திற்கு, நீங்கள் ரூ.15000 என்ற தொகையை 25 ஆண்டுகளுக்கு SIP மூலம் முதலீடு செய்து வந்த நிலையில், அதிலும் ஆண்டுக்கு 12% ரிட்டன்ஸ் கிடைத்தால், ஓய்வு காலத்தில், உங்களிடம் 2.5 கோடி இருக்கும். இதனை SWP திட்டமாக மாற்றினால், மாதம் ரூ.1,00,000 என்ற அளவில், சுமார் 30 ஆண்டுகளுக்கு பணம் கிடைக்கும்
SWP என்னும் முறையான திரும்பப் பெறுதல் திட்டத்தில், இது வரை செய்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை படிப்படியாக திரும்ப பெறும் வகையில், உங்கள் யூனிட்களை விற்பனை செய்வதாகும். இதன் மூலம் உங்கள் புழக்கத்திற்கு பணம் கிடைக்கும் என்பதோடு, விற்காத யூனிட்டுகள் மதிப்பும் கூடிக் கொண்டே இருக்கும்.
பரஸ்பர நிதி முதலீட்டாளர்களை பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றாலும், எப்போதும் சிறந்த வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில், குறிப்பாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் நிறைய ரிஸ்க் உள்ளது. நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினால், இது தொடர்பாக உங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.