வணங்கான் vs கேம் சேஞ்சர் : முதல் நாள் வசூல் யாருக்கு அதிகம்?

Vanangaan And Game Changer First Day Collection : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த படங்களின் முதல் நாள் கலக்‌ஷன் விவரத்தை இங்கு பார்ப்போம். 

Vanangaan And Game Changer First Day Collection : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ரிலீஸ் ரேஸில் இறங்கின. இந்த நிலையில், அதில் முதலாவதாக இறங்கியிருக்கும் படம் வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர். இந்த இரு படங்களுமே பெரிய தமிழ் இயக்குநர்களின் படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியது. இதையடுத்து, இந்த இரு படங்களும் முதல் நாளில்  எவ்வளவு வசூல் பெற்றது என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

1 /7

பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படமும் ஜனவரி 10ஆம் தேதியான நேற்று வெளியானது. 

2 /7

இந்த இரு படங்களுக்குமே ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இருப்பினும், தெலுங்கில் உருவானதால் கேம் சேஞ்சர் படத்திற்கு தமிழகத்தை விட ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட இடங்களில்தான் நல்ல வரவேற்புகளை பெற்றுள்ளது. 

3 /7

வணங்கான் படத்தின் வேலைகள், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்தது. இதில் முதலில் சூர்யா நடித்து வந்தார். சில காரணங்களால் இவர் இந்த படத்திலிருந்து விலக, அருண் விஜய் ஹீரோவானார். இவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். 

4 /7

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். 

5 /7

வணங்கான் படம், அக்மார்க் பாலா படமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும், தொய்வான திரைக்கதையாக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

6 /7

கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் எப்போதும் ஓட்டும் பழைய ரீலையே ஓட்டியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால், ராம் சரணின் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. 

7 /7

தமிழில் கேம் சேஞ்சர் படம், தமிழகத்தில் மட்டும் ரூ.2.39 கோடி வசூலித்திருப்பதாகவும், வணங்கான் படம் ரூ.82 லட்சம் வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.