7th Pay Commission: பட்ஜெட்டுக்குப் பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு முன்பும், தீபாவளி நேரத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டது.
7th Pay Commission: ஜனவரியில் டிஏ 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 56% ஆக உயர்ந்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பதிவு மகிழ்ச்சியைத் தரும். பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் நாட்டின் சுமார் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சிறந்ததாக இருக்கவுள்ளது. இதில் அவர்களுக்கு இரண்டு நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பட்ஜெட்டுக்குப் பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு முன்பும், தீபாவளி நேரத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டது. அது ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு. இப்போது ஜனவரி 2025 -க்கான அறிவிப்புக்காக ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
7வது ஊதியக் குழுவின் படி அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுமட்டுமின்றி அகவிலை நிவாரண (Dearness Relief) அதிகரிப்பால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் ஏற்றம் காணும். டிஏ எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.
தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் கணக்கிடப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் கணக்கிடப்படுகின்றன.
இந்த முறை, ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரையிலான AICPI குறியீட்டு தரவின் அடிப்படையில், அரசாங்கம் அகவிலைப்படியை எவ்வளவு அதிகரிப்பது என்பதை தீர்மானிக்கும். இதுவரை நவம்பர் வரையிலான தரவுகள் வந்துள்ளன. இதன் அடிபப்டையில் அகவிலைப்படி சுமார் 3% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
ஊதிய உயர்வு கணக்கீடு: ஜனவரியில் டிஏ 3% அதிகரித்து மொத்த அகவிலைப்படி 56% ஆக உயர்ந்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.
இது தவிர கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி அரியர் தொகை பற்றியும் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடும். இது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாடாக இருக்கும்.
ஊழியர்களின் சம்பளம் மற்றும் தர ஊதியத்தைப் பொறுத்து டிஏ அரியர் தொகை மூலம் கிடைக்கும் தொகை மாறுபடும். லெவல் 1 பணியாளர்களுக்கு தோராயமாக ரூ.11,800 முதல் அதிகபட்சமாக ரூ.37,554 வரை கிடைக்கக்கூடும். லெவல் 13 பணியாளர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரை கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.