TN Rain Alert: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகள்?

TN Weather Report: சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jan 13, 2025, 03:57 PM IST
  • சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • அதிகபட்சமாக நெல்லையில் மழைபதிவு
TN Rain Alert: 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகள்?  title=

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று மாலை 5 மணி வரை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 5, நாலுமுக்கு பகுதியில் 4 மற்றும் காக்காச்சி பகுதியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மற்ற மாவட்ட பகுதிகளில் 3 செண்டிமீட்டருக்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது. 

மேலும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

பொங்கள் தினமான நாளை(ஜன.13), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

நாளை மறுநாள்(ஜன.14): தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.    

ஜன.15 அன்று, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

ஜன.16 முதல் 17 ஆகிய இரண்டு தினங்களில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

ஜன.18 மற்றும் 19 அன்று, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு

இன்று(ஜன.13) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28°  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை  23-24° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

நாளை(ஜன.14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29°  செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மேலும் படிங்க: மகேந்திராவின் 2 மிரட்டல் கார்கள்... ஒருமுறை சார்ஜ் போட்டு சென்னை டூ மதுரை போகலாம் - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News