‘நேசிப்பாயா’ ரசிகர்களை கட்டிப்போடும் படமாக இருக்கும்! அதிதி ஷங்கர் பேச்சு..

Aditi Shankar Talks About Nesippaya Movie : “படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக ‘நேசிப்பாயா’ இருக்கும்” - நடிகை அதிதி ஷங்கர்! 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Jan 13, 2025, 09:26 PM IST
  • அதிதி ஷங்க நடித்திருக்கும் நேசிப்பாயா படம்..
  • ஜோடியாக ஆகாஷ் முரளி..
  • படம் எப்படியிருக்கும்? நடிகை பதில்..
‘நேசிப்பாயா’ ரசிகர்களை கட்டிப்போடும் படமாக இருக்கும்! அதிதி ஷங்கர் பேச்சு.. title=

Aditi Shankar Talks About Nesippaya Movie : குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அதிதி ஷங்கர். இப்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக இவர் நடித்திருக்கும் ’நேசிப்பாயா’ படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

படம் பற்றி நடிகை அதிதி ஷங்கர் கூறும்போது, “ஸ்டைலிஷான இயக்குநர் விஷ்ணு வர்தனுடன் பணிபுரிய வேண்டும் என்பது மற்ற நடிகர்களைப் போல எனக்கும் கனவாக இருந்தது. கதாநாயகிகளை தன்னுடைய படத்தில் எப்போதும் அவர் அழகாக காட்டுவதோடு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வைப்பார். முழு படப்பிடிப்பு அனுபவமும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ஆகாஷ் முரளியுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்.  யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் கேமரூனும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘நேசிப்பாயா’ திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை ரசிகர்களைக் கட்டிப்போடும் படமாக இருக்கும்” என்றார். இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.

ஹீரோவாக அதர்வா தம்பி..

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா திரையுலகிற்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவரைத்தொடர்ந்து, இவரது சகோதரர் ஆகாஷும் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். அதர்வா, தனது முதல் படமான ‘பானா காத்தாடி’ மூலம் ரசிகர்களை பெரிதாக ஈர்த்தார். இதையடுத்து, அவர் நடித்த சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அந்த வகையில், ஆகாஷுக்கும் நேசிப்பாயா படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. \

மேலும் படிக்க | நேசிப்பாயா படம் ‘இப்படி’தான் இருக்கும்! இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறிய விஷயம்..

மேலும் படிக்க | ஷங்கர் vs அதிதி ஷங்கர்: அப்பாவுக்கு போட்டியாக மாறிய மகள்! எப்படி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News