கடந்த சில வாரங்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போது ஓய்வை அறிவிப்பார் என்ற கேள்வி இருந்து வருகிறது, இதற்கு அவரின் சமீபத்திய பார்ம் தான் முக்கிய காரணம். இந்நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 முடிந்தவுடன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ-யிடம் ரோஹித் பேசி வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் ஒய்வை அறிவிப்பார் என்றும், ஐபிஎல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்றும் நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியா தொடர் சொதப்பல்
சமீபத்திய ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா ரன்கள் அடிக்க சிரமப்பட்டார். இதனால் மெல்போன் டெஸ்ட் முடித்தவுடன், கடைசி மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. அந்த போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். விராட் கோலிக்கு பிறகு ஒருநாள் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வித கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா ஆரம்பத்தில் இருந்து பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ரோகித் சர்மா ஓய்வு அறிவிக்கும் பட்சத்தில் அது இந்திய அணிக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
கேப்டன் ரோஹித் சர்மா
டி20 போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் சர்மா பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். அதன் பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடரில் ரோஹித் சர்மா எப்படி விளையாட போகிறார் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக உள்ளனர்.
ரோஹித் - கம்பீர் மோதல்?
பார்டர் கவாஸ்கர் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இடையே மோதல்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அணியில் சில மாற்றங்கள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கௌதம் கம்பீரின் வீரர்கள் தேர்வு ரோகித் சர்மாவிற்கு பிடிக்கவில்லை என்றும், தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் ரோஹித் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சில இளம் வீரர்களை நியமிக்க பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. மூன்று இது வடிவங்களுக்கும் மூன்று வித கேப்டன்களை நியமிக்கலாம் என்ற முடிவில் பிசிசிஐ இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது டி20 போட்டிகளுக்கு மட்டும் சூர்யா குமார் யாதவ் கேப்டனாக இருந்து வருகிறார்.
மேலும் படிக்க | ஜஸ்பிரித் பும்ரா காயம்! இந்த முக்கிய தொடர்களை இழக்க நேரிடும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ