Keezhakarai Jallikattu 2025: தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டி இன்று (பிப். 23) காலை தொடங்கியது.
Keezhakarai Jallikattu 2025: தொடங்கியது கீழக்கரை ஜல்லிக்கட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பில் மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழகத்தின் மாநிலத் தலைவர் திருச்சி ராஜேஷ் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர்கள் தொடங்கி வைத்தனர்.
Keezhakarai Jallikattu 2025: 700 சிறந்த காளைகள், 500 சிறந்த வீரர்கள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 11 மாவட்டங்களில் இருந்து சிறந்த 700 காளைகளும், சிறந்த 400 மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர். மேலும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்த பின்னரும், வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்த பின்னரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு சுற்றுக்கும் 75 காளைகள் மற்றும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் பங்கு பெற உள்ள நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு என தனி பரிசு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Keezhakarai Jallikattu 2025: போலி டோக்கன், ஆள்மாறாட்டத்தை தடுக்க புதிய வழி
காளைகளுக்கும், வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்படவில்லை. பழமையான முறைப்படியே சிறந்த வீரர்கள், காளைகளை நேரில் சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள டோக்கன் வழங்கப்பட்டன.
டோக்கனில் பத்து ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள வரிசை எண் அடிப்படையில் கொண்டு காளைகளுக்கு டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. ஆள்மாறாட்டம் போலி டோக்கன்கள் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் காளையின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து பாக்கு வெற்றிலை கொடுத்து அவர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்துள்ளனர். இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Keezhakarai Jallikattu 2025: இந்தாண்டு களைக்கட்டிய மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்
ஜல்லிக்கட்டு போட்டிகள் அனைத்தும் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அதிலும் மதுரை மாவட்டத்தை சுற்றி நடத்தப்படும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் வருவது மட்டுமின்றி கூட்டம் கூட்டமாக பார்வையாளர்களும் வருகை தருவார்கள்.
அந்த வகையில், இந்தாண்டு பொங்கலுக்கு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வி.கே.சசிகலா பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை முதல் பரிசையும், இரண்டாவது பரிசாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த ஜி.ஆர். கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை 2வது பரிசையும் வென்றன. 19 காளைகளை அடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த கார்த்திக் முதல் பரிசை வென்றது.
மேலும் 2025ஆம் ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சத்திரப்பட்டியை சேர்ந்த விஜயாதங்கப்பாண்டி என்பவரது காளை முதல் பரிசை வென்றது. 14 காளைகளைப் பிடித்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் பார்த்திபன் முதல் பரிசை வென்றார்.
Keezhakarai Jallikattu 2025: மீண்டும் முதலிடம் பிடிப்பாரா அபிசித்தர்?
2025ஆம் ஆண்டின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சேலம் பாகுபலி காளை முதல் பரிசை தட்டித்தூக்கியது. 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் முதல் பரிசை வென்றார். தற்போது கீழக்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. கடந்தாண்டு கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் இந்த அபிசித்தர் (Abichithar) தான் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார். அந்த வகையில், இன்றைய போட்டியிலும் அவர் முதல் பரிசை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ