மறுபடியுமா... சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா... அச்சத்தில் உலகம்... அறிகுறிகள் இவை தான்

HKU5-CoV-2 என பெயரிடப்பட்டுள்ள புதிய வௌவால் கொரோனா வைரஸை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 22, 2025, 08:20 PM IST
  • சீனாவின் பிரபல வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி தலைமையில் நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி.
  • HKU5-CoV-2 வைரஸ் என்றால் என்ன?
  • புதிய வைரஸ் அடுத்த தொற்றுநோயை ஏற்படுத்துமா?
மறுபடியுமா... சீனாவில் மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா... அச்சத்தில் உலகம்... அறிகுறிகள் இவை தான் title=

HKU5-CoV-2 என பெயரிடப்பட்டுள்ள புதிய வௌவால் கொரோனா வைரஸை சீனாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா பரவல் முடிந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் உலக நாடுகளில் தாக்கத்தில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்றை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்திருப்பது உலக நாடுகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சி

சீனாவின் பிரபல வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி தலைமையில் நடைபெற்ற வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்த விரிவான ஆராய்ச்சியில், இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மற்றொரு தொற்றுநோய் பரவல் ஆபத்து குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இருப்பினும், HKU5-CoV-2 வைரஸின் தொற்றுநோயைப் பரப்பும் திறன் கோவிட்-19 வைரஸை விட மிகக் குறைவு என்று விஞ்ஞானிகள் (Health Tips) தெளிவுபடுத்தியுள்ளனர்.

HKU5-CoV-2 வைரஸ் என்றால் என்ன?

HKU5-CoV-2 என்பது மெர்பெகோவைரஸ் துணை இனத்தைச் சேர்ந்த வௌவால் கொரோனா வைரஸ் ஆகும். மத்திய கிழக்கு சுவாச நோய் அறிகுறி (MERS) வைரஸ் இந்த குழுவில் வருகிறது. இந்த வைரஸ் முதன்முதலில் ஹாங்காங்கில் ஜப்பானிய பிபிஸ்ட்ரெல் வௌவால் இனத்தில் கண்டறியப்பட்டது. மனித உயிரணுக்களை பாதிக்கும் இந்த வைரஸ், மற்ற பாலூட்டிகளையும் பாதிக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

புதிய வைரஸ் SARS-CoV-2 ஐ விட எவ்வளவு ஆபத்தானது?

புதிய வைரஸ் மற்றும் SARS-CoV-2 இரண்டும் மனித உயிரணுக்களில் நுழைவதற்கு ACE2 ஏற்பியைப் பயன்படுத்துகின்றன. ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், HKU5-CoV-2 வைரஸ் மனிதர்களிடையே பரவும் திறன் SARS-CoV-2 ஐ விட மிகவும் பலவீனமானது. இந்த வைரஸ் மனித செல்கள் மற்றும் நுரையீரல் திசுக்களை பாதிக்கும் என்று ஆய்வக சோதனைகள் கண்டறிந்துள்ளன. ஆனால் விரைவாக பரவுவதற்கான சாத்தியம் கோவிட் -19 ஐ விட மிகக் குறைவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய உணவுகள்!

புதிய வைரஸ் அடுத்த பெருந்தொற்றை ஏற்படுத்துமா?

HKU5-CoV-2 வைரஸ் வைரஸ் மனிதர்களை தாக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், இதைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். அனைத்து வௌவால் கொரோனா வைரஸ்களும் மனிதர்களுக்கு எளிதில் பரவாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். SARS மற்றும் MERS போன்ற நோய்கள் மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் அதிக திறனைக் கொண்ட கொரோனா வைரஸ்களால் ஏற்படுகின்றன. ஆனால் தற்போது இந்த திறன் HKU5-CoV-2 வைரஸில் காணப்படவில்லை என நிம்மதி அளிக்கும் செய்தியை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

HKU5-CoV-2 தாக்கியதற்கான அறிகுறிகள்

1. காய்ச்சல் மற்றும் சளி

2. இருமல் மற்றும் சோர்வு

3. சுவாசிப்பதில் சிரமம்

4. பசியின்மை

5. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி

மேலும் படிக்க | சுரைக்காய் உடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News