133 கிலோவில் இருந்த பெண்... 47 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? - 5 டிப்ஸ்!

Weight Loss Journey: 133 கிலோவில் இருந்த பெண் ஒருவர் 11 மாதங்களில் 47 கிலோவை குறைத்துள்ளார். அந்த பெண்ணின் உடல் எடை குறைப்பு அனுபவத்தை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2025, 11:49 AM IST
  • உடல் எடை குறைப்புக்கு கடுமையான உணவுமுறை பின்பற்றவில்லை.
  • ஊட்டச்சத்து குறித்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  • உடல் எடை குறைப்பில் அவர் கற்ற 5 பாடங்களை இங்கு காணலாம்.
133 கிலோவில் இருந்த பெண்... 47 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி? - 5 டிப்ஸ்! title=

Weight Loss Journey: முன்பெல்லாம் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள்தான் பெரும்பாலான விளம்பரங்கள், அதிலும் விழிப்புணர்வு சார்ந்த விளம்பரங்களில் இடம்பெறுவார்கள். ஏனென்றால், பொது சமூகத்தில் அவர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, அவர்களின் பிரபலத்தின் மூலம் விழிப்புணர்வை முன்னெடுப்பது பெரிய அளவில் பயன் தரும்.

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினருமே தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகின்றனர். தற்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் அளவிற்கு போக வேண்டியதில்லை.

Weight Loss Journey: அதிகரித்த சமூக ஊடக பிரபலங்கள்

இன்ஸ்டா பிரபலம், பேஸ்புக் பிரபலம், யூ-ட்யூப் பிரபலம் என பல்வேறு வகைகளில் உங்களுக்கு பிரபலங்கள் குவிந்து கிடக்கிறார்கள். மொபைல், கார், பைக் வாங்குவதில் இருந்து பங்குச்சந்தையில் முதலீடு செய்வது வரை இந்த பிரபலங்கள் சொல்லும் கருத்தை வேத வாக்காக ஏற்கின்றனர். அப்படியிருக்க, உடல் எடை குறைப்பு உள்பட உடல்நிலை சார்ந்தும் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் இருக்கின்றனர்.

அப்படியிருக்க அவர்கள் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும் என்றில்லை. உடல் எடை குறைப்போ அல்லது வேறு மருத்துவ உதவிகளையோ நீங்கள் செய்வதற்கு முன் நேரில் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது. எனினும், சமூக ஊடகங்களில் உடல் எடையை குறைத்தவர்களின் அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து கூடுதல் நன்மை அளிக்கும்.

Weight Loss Journey: 11 மாதங்களில் 47 கிலோவை குறைத்த பெண்

கனடாவில் வசிக்கும் இந்தியரான குரிஷ்க் கவுர் என்ற பெண் தனது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டிருந்தார். இது வைரலாகி 60 லட்சம் பேருக்கும் மேலாக பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் 133 கிலோவில் இருந்து கவுர், 2025ஆம் ஆண்டு ஜனவரியில் 86.5 கிலோ எடைக்கு வந்துள்ளார். அதாவது, 11 மாதங்களில் அவர் 47 கிலோவை குறைத்திருக்கிறார்.

Weight Loss Journey: குரிஷ்க் கவுரின் 5 பாடங்கள்

இதற்காக அவர் கடுமையான உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லையாம். உடல் எடை குறைப்பு குறித்த விழிப்புணர்வை பெற்று தொடர்ச்சியாக, சமநிலையான உணவுகளுடன் நிதானமாக மேற்கொண்ட முயற்சியால் உடல் எடை குறைந்ததாக அவர் கூறுகிறார். அவருக்கு உடல்நிலை பிரச்னைகள் இருந்தாலும் அதனை சமாளித்துக்கொண்டு வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றி உடல்நலனையும், மனநலனையும் ஆரோக்கியமானதாக மாற்றியிருக்கிறார். இந்நிலையில், உடல் எடை குறைப்பில் இருந்து அவர் கற்றுக்கொண்ட 5 பாடங்களை இங்கு காணலாம். இது உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gurishq Kaur (@gurishqkaur)

- ஊட்டச்சத்து குறித்த அறிவு: உணவுகள் குறித்தும், அதனால் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் குறித்த அறிவை வளர்த்துக்கொள்வது  அவசியம் என்கிறார் கவுர். கடுமையான டயட்டை பின்பற்றாமல் அவரது உடல் தேவைக்கே ஏற்ற ஊட்டச்சத்துகளை கொண்ட உணவுகளை அளவுடன் சாப்பிட்டு வந்துள்ளார். 

- புரோட்டீன் முக்கியம்: முட்டை,  சிக்கன், மீன்களில் சில வகைகள், டோஃபு போன்றவை புரதச்சத்து நிறைந்தவை. இவை உங்களின் வயிறையும் நிரம்பச் செய்யும், தசைகளையும் வலுவாக்கும். 

- அதிக நார்ச்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: நல்ல செரிமானத்திற்கும், ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் கௌர் அதிக நார்ச்சத்தை அளிக்கும் நட்ஸ், விதைகள், சால்ட், வதக்கிய காய்கறிகளை உட்கொண்டுள்ளார். 

- சுத்திகரிக்கப்படாத கார்ப்ஸ்: கார்போஹைட்ரேட்டை முழுவதுமாக கைவிடாமல் ஆரோக்கியமான சில கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடலாம். உததாரணத்திற்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கம்பு பிரெட் ஆகியவற்றை சாப்பிடலாம்.

- 80-20 விதி: அதாவது, 100 சதவீத உணவுப் பழக்கவழக்கத்தில் 80% ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை அவர் சாப்பிடுவாராம். மீதம் உள்ள 20% அவருக்கு பிடித்த மற்ற உணவுகள். இந்த சமநிலையை தொடர்ந்து பின்பற்றியே அவர் 11 மாதங்களில் 47 கிலோவை குறைத்துள்ளார். 

(பொறுப்பு துறப்பு: குரிஷ்க் கவுரின் இந்த அறிவுரைகள் அனைத்தும் அவரது சொந்த கருத்துக்கள். இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது)

மேலும் படிக்க | குறைவாக சாப்பிட்டாலும்... தொப்பை குறையலையா... இந்த தவறுகள் காரணமாக இருக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News