Tamil Nadu Latest News Updates: சென்னை ஐ.ஐ.டி.,யில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவம் நடைபெற்ற தினத்தில் ஐ.ஐ.டி வளாகத்திற்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் டீக்கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியாற்றிய உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. ஸ்ரீராம் அத்துமீறியதால் அதிர்ச்சி அடைந்த மாணவி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஐடி நிர்வாகம் விளக்கம்
மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளானது குறித்து சென்னை ஐ.ஐ.டி, நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில்,"இந்த சம்பவம் ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெறவில்லை. கல்வி நிறுவனத்துக்கு வெளியே மாணவி டீ குடிக்கச் சென்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது. கைதான நபருக்கும் ஐ.ஐ.டி.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் வெளியே உள்ள பேக்கரியில் பணியாற்றி உள்ளார். மாணவி நேற்று (ஜன. 14) மாலை ஐ.ஐ.டி., வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்குச் சென்ற போது பாலியல் தொல்லை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க | வேலைவாய்ப்பற்ற இளைஞர் உதவித் தொகை - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
பாலியல் தொல்லை கொடுத்த நபரை மாணவியின் நண்பர் உள்ளிட்டோர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அனைத்து வகையிலும் ஐ.ஐ.டி., நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மாணவர்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி., வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாணவர்கள், குடியிருப்பவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்துள்ளது.
புதுச்சேரியிலும் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்
முன்னதாக, புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வளாகத்திலும் மாணவிக்கு பாலியல் ரீதியாக அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. அங்கு ஆண் நண்பருடன் இருந்த மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை அளித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த மாணவி வடமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு படிக்க வந்துள்ளார். இந்நிலையில், அவருடன் இருந்த ஆண் நண்பரை 3 பேர் கொண்ட கும்பல் விரட்டியடித்து விட்டு மாணவியிடம் அத்துமீறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த 3 பேரில் ஒருவர், பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் என்றும் கூறப்படுகிறது.
அண்ணா பல்கலை., வன்கொடுமை
கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், இரவில் ஆண் நண்பருடன் இருந்த பெண்ணிடம் ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. குறிப்பாக, அந்த சம்பவத்தில் எப்ஐஆர் வெளியானதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் பொதுவெளிக்கு தெரிந்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.
இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த வழக்கை விசாரிக்கக் கோரி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்த்தல் - தொடங்கியது பிரச்சாரம்! திமுக திட்டம் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ