Champions Trophy 2025 Latest News Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடைசியாக 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதற்கு பின் இந்த தொடரை கைவிடுவதாக ஐசிசி அறிவித்திருந்தது. இருப்பினும் தற்போது மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தூசுத் தட்டி இம்முறை நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் இதனை நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி: இதுவரை சாம்பியன்கள்
இதுவரை 8 முறை சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுள்ளது. முதலில் இந்த தொடரின் பெயர் ஐசிசி நாக்-அவுட் கோப்பை என இருந்தது. அதன் பின்னரே பெயர் மாற்றம் பெற்றது. 1998ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் இதன் முதல் தொடர் நடைபெற்றது. இந்த 1998ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா, 2000இல் நியூசிலாந்து, 2002இல் இந்தியா மற்றும் இலங்கை, 2004இல் மேற்கு இந்திய தீவுகள், 2006 மற்றும் 2009இல் ஆஸ்திரேலியா, 2013இல் இந்தியா, 2017இல் பாகிஸ்தான் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி: 29 ஆண்டுகளுக்கு பின்...
அந்த வகையில், 29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் ஐசிசி தொடர் தற்போது நடைபெற இருக்கிறது. வரும் பிப். 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரண்டு குழுக்களாக 8 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும்; இரண்டாம் பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க | Champions Trophy: இந்திய அணியின் 2 பிரச்னைகள்... யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
சாம்பியன்ஸ் டிராபி: பலப்பரீட்சை புரியும் 8 அணிகள்
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகளும் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெறும். பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவில்பிண்டி ஆகிய மூன்று நகரங்களில் போட்டி நடக்கிறது. இந்திய அணி (Team India) அதன் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட உள்ளது. இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்கோ, இறுதிப்போட்டிக்கோ தகுதிபெற்றால் அதன் போட்டிகள் துபாயில் நடைபெறும்.
சாம்பியன்ஸ் டிராபி: தனியாக பாகிஸ்தான் பறக்கும் ரோஹித் சர்மா
பிப். 16 அல்லது பிப். 17ஆம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க விழாவை நடத்த பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் (Rohit Sharma) பாகிஸ்தானுக்கு வருகை தருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி: ரோஹித் சர்மாவின் கடைசி ஐசிசி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஸ்குவாடை இன்னும் அறிவிக்கவில்லை. வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 15 பேர் கொண்ட ஸ்குவாடை இந்திய அணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா தலைமை தாங்கும் கடைசி ஐசிசி தொடர் இது என்றும் பெரும்பாலும் ரோஹித் சர்மா விளையாடும் கடைசி ஐசிசி தொடர் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வீரர்களின் மனைவிகளுக்கு செக் வைத்த பிசிசிஐ... கடுமையான கட்டுப்பாடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ