Tamil Nadu Government Pongal Gift | தமிழ்நாடு அரசு இந்தாண்டு பொங்கல் பரிசு வழங்கவில்லை என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக இந்த பதிலை கொடுத்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் 2500 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்ததே என அதிமுகவின் எஸ்பி வேலுமணி எழுப்பிய கேள்விக்கு, அப்போது தேர்தல் வந்தது, இப்போது தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
பொங்கல் பரிசு
தமிழ்நாட்டில் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழுக்கரும்பு, சர்க்கரை மற்றும் பச்சரி ஆகியவை இடம்பெறும். அத்துடன் இலவச வேட்டி சேலையும் வழங்கப்படும்.
ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுமா?
ஆனால், ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் இடம்பெறாது என தெரிவித்தார். அதற்கு அதிமுக காலத்தில் ரூ.2500 வழங்க வேண்டும் என திமுக குரல் கொடுத்ததே, இப்போது என்னாச்சு? என எஸ்பி வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக அப்போது தேர்தல் இருந்தது, இப்போது தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என கூறினார்.
பொங்கல் பரிசு தொகை வழங்கப்படாதது ஏன்?
தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படாததன் பின்னணியில் சில காரணங்கள் இருக்கின்றன. அண்மையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு போதுமான நிதியை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிதியுதவி வழங்க வேண்டியிருந்தது. இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், கலைஞர் உரிமைத் தொகை என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே பயனாளிகள் தான் பொங்கல் பரிசு பெறுபவர்களாகவும் இருக்கின்றனர். இந்த காரணங்களால் தான் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க | Pongal 2025: போகி முதல் காணும் பொங்கல் வரை... தெரிந்துகொள்ள வேண்டிய சடங்குகள்!
மேலும் படிக்க | Pongal 2025 Kolam: பொங்கலுக்கு இந்த கோலங்களை போடுங்க, தெருவே திரும்பிப்பார்க்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ