பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 10, 2025, 01:10 PM IST
  • இரண்டு சட்ட மசோதாக்கள் பேரவையில் தாக்கல்
  • மசோதாக்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் உரை.
  • பாலியல் குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை... சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு title=

Tamil Nadu Latest News Updates: சிறுமியை வன்கொடுமை செய்தாலோ, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை விதிக்கப்படும் என சட்டப்பேரவைில் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதன் சட்ட திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்டமுன்முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து சட்ட மசோதாவை அறிமுகம் செய்யும் முன் உரையாற்றிய அவர்,"பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத் திருத்தங்களோடு இரண்டு சட்டமுன்வடிவுகளை இந்த அவையில் அறிமுகம் செய்வதற்குமுன், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவரங்களைத் தங்களுடைய அனுமதியோடு முன்னுரையாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

பெண்களுக்கான பாதுகாப்பு

பேரவைத் தலைவரே, சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரும் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம்.

இதன்மூலமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.

மேலும் படிக்க | கலைஞர் உரிமைத் தொகை குட் நியூஸ்! விண்ணப்பிப்பது எப்படி?

அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர்மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. அரசின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.

60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை...

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான். 

அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.

மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்

இந்த வகையில், B.N.S. சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது. இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, B.N.S, மற்றும் B.N.S.S. சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும், தமிழ்நாடு 1998ஆம் ஆண்டு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினால் என மரண தண்டனை விதிக்கப்படும். அதேபோல், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என சட்ட திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்டனைகளில் மாற்றம்

இந்த பாலியல் துன்புறுத்தலில் டிஜிட்டல் மற்றும் மின்னணு முறையிலான துன்புறுத்தலும் அடங்கும். முன்னதாக டிஜிட்டல் மற்றும் மின்னணு சார்ந்த துன்புறத்தலுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முதல் குற்றச்சாட்டிலேயே 5 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் அபராதம் வரை விதிக்கப்படும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை அந்த குற்றவாளி தொடர்ந்து செய்யும்போதுபட்சத்தில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை நீட்டிக்கப்படும். மேலும் அபராதம் ரூ.10 லட்சமாகவும் விதிக்கப்படும். 

பாலியல் வன்கொடுமையால் மரணம் நிகழ்ந்தால், கொலை நோக்கத்துடன் குற்றவாளி குற்றத்தில் ஈடுபட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதமும், கொலை நோக்கமின்றி குற்றம் நடந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும், கவனக்குறைவால் நடந்தால் 10 ஆண்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது. 

ஆனால் இதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொலை நோக்கத்துடன் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கொலை நோக்கமின்றி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல், கவனக்குறைவால் நடந்தால் 15 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கட்டாயம்

நிறுவனங்களுக்கும் இந்த சட்ட திருத்தத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் போதிய அளவில் இல்லை என்றால் அது நிர்வாகத்தின் பொறுப்பாகும். கட்டாயம் சிசிடிவி அனைத்து இடங்களிலும் பொருத்தப்பட்டு, இயங்கும் நிலையில் பராமரிக்க வேண்டும். சிசிடிவி கேமரா இல்லை என்றால் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சீமான் அறிவிலி, தற்குறி என அமைச்சர் துரைமுருகன் கடும் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News