Game Changer Movie X Review : ஷங்கர் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம், கேம் சேஞ்சர். இந்தியன் 2 படம் மண்ணை கவ்விய பிறகு இதன் மூலம் அவர் கம்-பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் எக்ஸ் தள விமர்சனங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
கேம் சேஞ்சர் திரைப்படம்:
தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் படம், கேம் சேஞ்சர். ராம் சரண் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வந்தது. ஒருவழியாக, 3 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ஆம் தேதியான இன்று வெளியாகி இருக்கிறது.
எக்ஸ் தள விமர்சனம்:
கடைசியாக, ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம், 5 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியானதை அடுத்து, பெருந்தோல்வி அடைந்தது. இதையடுத்து, கேம் சேஞ்சர் படம் இவருக்கு கம்-பேக் கொடுத்திருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து இங்கு பார்ப்பாேம்.
கேம் ஓவர்!
கேம் சேஞ்ச்ர் படத்தை பார்த்த ஒரு ரசிகர், படத்திற்கு “கேம் ஓவர்” என்ற ஒரு வரி விமர்சனத்தை கொடுத்திருக்கிறார். மேலும், “இத்தனை வருடத்தில் இது போன்ற ஒரு படத்தை பார்த்ததில்லை யப்பா” என்று கூறியிருக்கிறார்.
Game over Intha worst movie ni inni years yela tesarra babu #GameChanger pic.twitter.com/tPNIxvJdAx
— (@ravipspkfan) January 10, 2025
இன்னொரு ரசிகர், ஒரே வரியில் “நல்ல படம்” என்று கூறியிருக்கிறார். ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா என அனைவரையும் அவர் பாராட்டியிருக்கிறார். மேலும், தமனின் இசையு நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். மொத்தத்தில் படம் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
புதுசா எதையும் எதிர்பார்க்க கூடாது!!
கேம் சேஞ்சர் படத்தை பார்த்த இன்னொரு ரசிகர், “ஷங்கரிடம் இருந்து புதுசா எதையும் எதிர்பார்க்காதீங்க” என்று கூறியிருக்கிறார்.
Please don’t expect anything new from Shankar
He is finished man … old age story n screenplay n taking … #GameChanger #GameChangerReview
— .... (@thaaalabheem0) January 10, 2025
மேலும், கேம் சேஞ்சர் படம் பழைய காலத்து கதை மற்றும் திரைக்கதையை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
முதல் பாதி விமர்சனம்:
கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாதி ஹைலைட்களை கூறியிருக்கும் ஒரு ரசிகர், ராம் சரணின் எண்ட்ரி மற்றும் தமனின் இசை நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், படத்தின் இடைவேளை காட்சி நன்றாக இருந்ததாகவும், இதுவும் எப்பவும் போல ஷங்கரின் பழைய கதைதான் என்றும் கூறியிருக்கிறார்.
#GameChanger highlights so far:
Ram Charan entry
Thaman music
Interval blockIt's #Shankar again whose story is outdated and the reason for mixed reviews.
Highlights of the second half are awaited.#GameChangerReview
— Cinema & Cricket (@Durgesh180790) January 10, 2025
சுமார்தான்!!
கேம் சேஞ்சர் படம், சுமாராக இருப்பதாக ஒரு ரசிகர் கூறியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் 20 நிமிட ஃப்ளேஷ் பேக் காட்சி நன்றாக இருப்பதாகவும், ராம் சரண் இரு வேடங்களில் நன்றாக நடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
@Movies4u_Officl #GameChangerReview - AVERAGE!!
The second half is better with a good 20-minute flashback. Ram Charan gives his best in both roles as Appanna and Ram Nandhan.
The dialogues are well-written, and the songs "Jaragandi" great on screen.#GameChanger #RamCharan— Heisenberg (@Mohamed97613758) January 10, 2025
வசனங்கள் நன்றாக இருப்பதகவும், ஜரகண்டி பாடல், பார்ப்பதற்கு நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..
மேலும் படிக்க | கேம் சேஞ்சர் படம் எப்படி? வெளியானது முதல் விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ