செவ்வாய் வக்ர நிவர்த்தி.... இந்த ராசிகளுக்கு சிக்கல்களும் துன்பங்களும் காத்திருக்கு... கவனமா இருங்க

செவ்வாய் வக்ர நிவர்த்தி: தைரியம், வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய். செவ்வாய் அருள் பெற்றவர்கள், ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார்கள்.

மஹாசிவராத்திரிக்கு சற்று முன்பு பிப்ரவரி 24 அன்று செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். காலை 5:17 மணி முதல் செவ்வாய் வக்ர நிவர்த்தி அடைய தொட்ங்குகிறார் என ஜோதிட கணிப்புகள் கூறுகின்றன.

1 /8

செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால், ஜாதகருக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது  ராசியை மாற்றக் கூடியவர்.

2 /8

செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் சில ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் அதிகாரிகளின் அழுத்தத்தை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் அமைதியின்மையுடன், கடுமையான நோய்களும் உங்களைச் சூழ்ந்து கொள்ளலாம்.  

3 /8

ரிஷபம்: செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் குடும்பம், சேமிப்பு மற்றும் பேச்சுத்திறன பாதிக்கும். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பேச்சைக் கட்டுப்படுத்தி கண்ணியமாகப் பேச வேண்டும். இல்லையெனில் வீட்டில் பிரச்சனைகள் வரலாம். எனவே, பொறுமையாக இருந்து விவேகத்துடன் செயல்பட வேண்டும். எந்த வகையான சர்ச்சையையும் தவிர்க்க வேண்டும்.   

4 /8

கடகம்: செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தியினால், தொழில் வாழ்க்கையில் திடீர் மற்றும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படலாம். தைரியம், வலிமை மற்றும் உறுதியை இழக்கலாம். குறுகிய பயணங்கள், மருத்துவ கட்டணம் அல்லது சட்ட விஷயங்களால் உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலகட்டத்தில் சண்டை சச்சரவுகள் வரலாம், உடல் நலக்குறைவு ஏற்படலாம்.

5 /8

துலாம் ராசி: செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தியினால், செலவுகள், குறிப்பாக பயணம் மற்றும் உடல்நலம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டில் சற்று மன உளைச்சல் ஏற்படலாம். உங்கள் உரையாடலில் ஆக்ரோஷம் கூடும், எனவே நிதானத்துடன் பேசுங்கள். தாயின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். திடீரென்று சில நோய்களை சந்திக்க நேரிடும்.

6 /8

விருச்சிக ராசி: செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தி உங்களுக்கு சாதகமாக இருக்காது. உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்தி கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிப்பார்கள். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். ஏனெனில் சில நேரங்களில் அவை சரியாக புரிந்து கொள்ளப்படாமல் உறவுகள் பாதிக்கலாம்.

7 /8

தனுசு ராசி: செவ்வாய் கிரகத்தின் வக்ர நிவர்த்தி சில சவால்களைத் தரக்கூடும். மனதில் பதற்றத்தை உருவாக்கலாம். உங்கள் வாழ்க்கையில், உங்கள் வேலையைப் பற்றி நீங்கள் சில பாதுகாப்பின்மையை உணரலாம். உங்கள் குடும்பத்தில் உள்ள எவருக்கும் தொண்டை அல்லது பிற உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் தனிப்பட்ட உறவுகளிலும் சில சந்தேகங்களை உருவாக்கலாம்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.