கெட்டிமேளம்: துளசியிடம் வந்த பொறுப்பு.. ஸ்ரீகாந்த் உயிலால் காத்திருந்த அதிர்ச்சி- இன்றைய எபிசோட் அப்டேட்

Ketti Melam Serial Today Episode : துளசியிடம் வந்த பொறுப்பு.. ஸ்ரீகாந்த் உயிலால் காத்திருந்த அதிர்ச்சி - கெட்டிமேளம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Keerthana Devi | Last Updated : Feb 19, 2025, 12:28 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
கெட்டிமேளம்: துளசியிடம் வந்த பொறுப்பு.. ஸ்ரீகாந்த் உயிலால் காத்திருந்த அதிர்ச்சி- இன்றைய எபிசோட் அப்டேட்  title=

Ketti Melam Serial Today February 17th Day Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். 

நேற்றைய எபிசோட்: வெற்றி தியாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

kettimelam

இன்றைய எபிசோட் அப்டேட்: அதாவது, ஜெகன் மற்றும் மோனிகா ஆகியோர் வெற்றியை சந்தித்து தியாவை தங்களுடன் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து துளசி மீண்டும் வெற்றிக்கு போன் செய்து நன்றி சொல்கிறாள். பணம் கொடுப்பதாக சொல்ல வெற்றி இதுக்கெல்லாம் எதுக்குங்க பணம் கொடுக்கறீங்க என்று சொல்கிறான். 

அடுத்து கவின் அஞ்சலியின் பெயரை ஒரு டைரியில் எழுதி வைத்து குளிக்க செல்ல வரதராஜன் ரூமுக்குள் வருகிறார். டைரியில் பெயரை பார்த்து விடுவாரோ என்ற பில்டப் எகிற வெளியே வந்த கவினிடம் நோட்டை எடுத்து கொடுத்து ஒழுங்கா படி என்று சொல்லி செல்கிறார். 

kettimelam

அடுத்து லாயர் ஜெகன் வீட்டிற்கு வருகிறார். ஜெகன் இன்னைக்காகவாது உயிலை படிப்பீங்களா? என்று கேட்க லாயர் உயிலை படிக்கும் போது துளசியும் இங்கே இருக்கனும்.. அப்போ தான் உயிலை படிக்க முடியும். ஸ்ரீகாந்தை அப்படி தான் உயில் எழுதி வைத்திருக்கிறார் என்று ஷாக் கொடுக்கிறார். 

அடுத்து மோனிகா தியாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி துளசிக்கு போன் செய்ய அவளும் லட்சுமியும் ரகுராமுடன் கிளம்பி இங்கே வருகின்றனர். லாயர் ஸ்ரீகாந்த் சைன் அத்தாரிட்டியை துளசிக்கு கொடுத்திருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

kettimelam

ஜெகன் எல்லாவற்றையும் தங்களது பெயரில் எழுதி வைத்து விட்டு செல்லும் படி அவமானப்படுத்துகிறான். லட்சுமி முதல் முறையாக அவர்களை எதிர்த்து பேசுகிறாள். பிறகு ரகுராம் துளசியை ரெஸ்டாரண்ட் அழைத்து சென்று அந்த குழந்தையையும் விட்டுடாத, சொத்தையும் விட்டு விடாதே என்று சொல்கிறான். 

மேலும் தங்கச்சி மூலமாக ஸ்ரீகாந்த் சொத்தை வைத்து செட்டிலாகி விட திட்டம் போடுகிறான். துளசி அப்பா அம்மா கிட்ட பேசிட்டு தான் முடிவு செய்ய முடியும் என்று கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க| 3 படங்கள்- 3000 கோடி வசூல்! யார் இந்த நாயகி? நயன்தாரா-த்ரிஷா கிடையாது!

மேலும் படிக்க| எதையும் பாரமாக தலையில் போட்டுக் கொள்வதில்லை: எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News