Delhi New CM Rekha Gupta: மாணவர் அணியின் தலைவராக இருந்து பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறி தற்போது டெல்லியின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார் ரேகா குப்தா. அவரின் இந்த வளர்ச்சி மக்கள் சேவையில் அவரின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. வடக்கு டெல்லியின் முன்னாள் மேயராக இருந்த ரேகா குப்தா டெல்லி முதல்வர்களுக்கான போட்டியில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக இதனை தக்க வைத்துக்கொள்ள பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு ரேகா குப்தா அதிகம் உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த ரேகா குப்தா?
ஹரியானாவில் உள்ள ஜூலானா பகுதியை சேர்ந்த ரேகா குப்தா நீண்ட ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார். பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக டெல்லி அரசியலில் இவரது பெயர் முக்கியமானது. ஷாலிமார் பாக் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ள இவர் தன்னுடைய செயல்பாடுகளால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஆர்எஸ்எஸ் குடும்ப பின்னணி கொண்ட ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்லூரி வாழ்க்கையை தொடங்கினார். இளங்கலை வணிகம் படித்துள்ள இவர் மேலாண்மை மற்றும் கலைகளில் பட்டங்கள் பெற்றுள்ளார். பிறகு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
Congratulations @gupta_rekha on being elected leader of the legislative party of @BJP4Delhi. Under the leadership of PM @narendramodi and with the guidance of @BJP4India president @JPNadda, I am confident that our government will serve the people of Delhi to meet with their… pic.twitter.com/l04hZUBn6Z
— Nirmala Sitharaman (@nsitharaman) February 19, 2025
அரசியலில் படிப்படியாக வளர்ந்த ரேகா குப்தா!
ஆரம்ப காலகட்டங்களில் கல்லூரியில் மாணவர் அணியின் தலைவராக இருந்து பல்வேறு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் ரேகா குப்தா. 1996 முதல் 1997 வரை டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவராக இருந்துள்ளார் ரேகா. மாணவர் நலன் மற்றும் இளைஞர் அதிகாரம் போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கல்லூரியில் மாணவர் அணியின் செயல்பாடுகளுக்கு பிறகு நகராட்சி அரசியலில் நுழைந்தார் ரேகா. 2007 மற்றும் 2012ல் உத்தரி பிடம்புரா வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுன்சிலராக இருந்த சமயத்தில் மக்கள் பணிகளில் அதிகம் கவனம் செலுத்தி பெயர் பெற்றார்.
தலைமை பதவிகள்
பாஜகவில் சேர்ந்த பிறகு பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார் ரேகா குப்தா. வடக்கு தில்லியில் மேயராகவும் பணியாற்றி உள்ளார். முதலில் பாஜக டெல்லி மாநிலப் பிரிவின் பொதுச் செயலாளராக இருந்த அவர், தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பாஜக சார்பில் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து திட்டங்களிலும் இவரது பெயர் இருக்கும். 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்ட இவர் ஆம் ஆத்மி வேட்பாளர் வந்தனா குமாரியை விட 29,595 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
முதலமைச்சர் ரேகா குப்தா
டெல்லியின் முதலமைச்சர் வேட்பாளர்களில் முக்கியமான ஒருவராக ரேகா குப்தா பார்க்கப்பட்டார். மாணவர் அணி தலைவர் முதல் பாஜவில் முக்கிய பொறுப்புகள் வரை அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளார். தனது பொதுசேவைகள் மூலம் மக்களை அதிகம் கவர்ந்துள்ளார் ரேகா குப்தா. டெல்லியின் எதிர்காலம் இவரது ஆட்சியில் சிறப்பாக இருக்கும் என்று இப்போது இருந்தே கூறப்படுகிறது. சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக), ஷீலா தீட்சித் (காங்கிரஸ்) மற்றும் அதிஷி (ஏஏபி) ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் பெண் முதல்வராக பதவியேற்க உள்ளார் 50 வயதான குப்தா. இன்று டெல்லியில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் முதல்வராக பொறுப்பேற்கிறார்.
மேலும் படிக்க - பெண் மரணம்.. வழக்கை மாற்றிய 4 வயது சிறுமியின் ஓவியம்..! சிக்கிய அப்பா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ