நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான சீனித்துளசி

சீனித்துளசி என்னும் ஸ்டீவியா என்னும் இலை, சர்க்கரையை விட அதிக இனிப்பானது. சொல்லப்போனால், இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 50 முதல் 300 மடங்கு அதிகம். ஆனால், கலோரிகளோ மிகக் குறைவு.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 19, 2025, 06:52 PM IST
  • சர்க்கரைக்கு மாற்றாக உள்ள இயற்கை இனிப்புகள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
  • சர்க்கரை நோய் உள்ளவர்களும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும், சிறந்த தேர்வாக இருக்கும்.
  • சர்க்கரைக்கு மாற்றான பொருட்களில் ஸ்டீவியா மிகவும் பிரபலமாகி வருகிறது.
நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு... சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான சீனித்துளசி title=

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்புகளை சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது மிக அவசியம். சர்க்கரையைத் தவிர்க்கவில்லை என்றால், பல மோசமன விளைவுகளை சந்திக்கலாம். ஆனால் இனிப்புகளின் சுவையை முழுவதுமாக கைவிடுவதும் எளிதல்ல. இத்தகைய சூழ்நிலையில், சர்க்கரைக்கு மாற்றாக உள்ள இயற்கை இனிப்புகள் இன்று மிகவும் பிரபலமாகி வருகின்றன. 

சீனித்துளசி என்னும் ஸ்டீவியா என்னும் இலை, சர்க்கரையை விட அதிக இனிப்பானது. சொல்லப்போனால், இனிப்புச் சுவையில் சர்க்கரையைவிட 50 முதல் 300 மடங்கு அதிகம். ஆனால், கலோரிகளோ மிகக் குறைவு. சர்க்கரை நோய் உள்ளவர்களும், உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களும், சர்க்கரைக்கு மாற்றான பொருட்களில் ஸ்டீவியா மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஸ்டீவியாவில் உள்ள ஸ்டீவியோல் கிளைகோசைடு என்ற தனிமம்

ஸ்டீவியா என்பது வட மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு மூலிகையில் இருந்து பெறப்படும் ஒரு மூலிகை இனிப்பு ஆகும். இந்தியாவில் இது 'சீனித் துளசி' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் சர்க்கரையை விட 50 முதல் 300 மடங்கு இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட ஜீரோ கலோரிகள் என்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் . ஸ்டீவியாவில் உள்ள ஸ்டீவியோல் கிளைகோசைடு என்ற தனிமம் தான் அதன் இனிப்பு சுவைக்கு முக்கிய காரணம். இது உடலில் (Health Tips) உள்ள குளுக்கோஸ் அளவை பாதிக்காது. 

உணவில் ஸ்டீவியாவின் பயன்பாடு

ஸ்டீவியாவின் பல பண்புகள் அதை ஆரோக்கியமான தேர்வாக ஆக்குகின்றன. இதை சூடான பானங்கள் மற்றும் குளிர் பானங்கள் இரண்டிலும் சேர்க்கலாம். பழங்களில் சேர்க்கலாம் மற்றும் சில வகையான பேக்கிங் தயாரிப்புகளிலும் பயன்படுத்தலாம். இருப்பினும், இது சர்க்கரையைப் போல கேரமல் சுவையை தராது. எனவே இதை அனைத்து வகையான இனிப்புகள் மற்றும் பேக்கிங்கில் பயன்படுத்த முடியாது. அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஸ்டீவியோல் கிளைகோசைடுகளுக்கு "பொதுவாக பாதுகாப்பானது" (GRS) அந்தஸ்தை வழங்கியுள்ளது. அதனால்தான் இது பல சுகர் ப்ரீ பானங்கள், ஜாம்கள் மற்றும் பால் பொருட்களில் பொதுவான மூலப்பொருளாகக் காணப்படுகிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சீனித்துளசி

2018ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்டீவியாவை உட்கொண்ட பிறகு, 60 முதல் 120 நிமிடங்களில் இரத்த சர்க்கரை அளவு குறைவதைக் கண்டனர். சுவாரஸ்யமாக, இன்சுலின் சுரப்பதற்கு முன்பே மாற்றத்தை காண முடிந்தது. 2026ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், உலர்ந்த ஸ்டீவியா இலைப் பொடியை உட்கொள்வதாக நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க | ஒரு நொடியில் ரத்த சர்க்கரை கட்டுப்பட..இந்த பொடிப்போதும்! நைட் தூங்கும்போது இதை மட்டும் செய்யுங்க!

ஸ்டீவியா பயன்பாடு தொடர்பாக நிபுணர்களின் கருத்து

ஸ்டீவியா இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ள சீனித்துளசி உடலை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. பசியைக் கட்டுப்படுத்துவதுடன், இனிப்பு சாப்பிடும் ஆசையையும் நீக்குகிறது. ஸ்டீவியா ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.

மருத்துவர்கள் வழங்கியுள்ள ஆலோசனை

நீரிழிவு நோயாளிகள் சீனித்துளசியை முன்னெச்சரிக்கை அவசியம். உங்கள் உணவில் ஸ்டீவியாவைச் சேர்ப்பதற்கு முன், உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பதை கண்டறிய வேண்டியது அவசியம். சிலர் ஸ்டீவியாவுக்கு உணர்திறன் உடையவர்களாக இருக்கலாம். இருப்பினும், ஸ்டீவியாவின் எதிர்மறை விளைவுகள் எந்த ஆய்விலும் காணப்படவில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு, ஸ்டீவியா ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இது இயற்கையானது, குறைந்த கலோரி மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், அதை சரியான அளவு மற்றும் சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

மேலும் படிக்க | 123 கிலோ இருந்த இன்ஸ்டா பிரபலம்... 48 கிலோ உடல் எடையை குறைக்க உதவியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News