Today Rasipalan: இன்று பிப்ரவரி 20ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். தேவையில்லாத அலைச்சல் மூலம் சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுபவம் மேம்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : மந்தமான நாள். பரணி : அனுபவம் மேம்படும். கிருத்திகை : நெருக்கடியான நாள்.
திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம் கிருத்திகை : பாராட்டுக்கள் கிடைக்கும். ரோகிணி : அனுசரித்துச் செல்லவும். மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். உடன் இருப்பவர்கள் ஆதரவால் சில காரியங்கள் நடைபெறும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். இடம் பூமியால் நினைத்த லாபங்கள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும். திருவாதிரை : ஆர்வம் உண்டாகும். புனர்பூசம் : லாபகரமான நாள்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம் புனர்பூசம் : சந்தோஷமான நாள். பூசம் : புரிதல் உண்டாகும். ஆயில்யம் : ஆர்வம் பிறக்கும்.
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய மாற்றம் ஏற்படும். அனுபவம் மிக்கவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். சுதந்திர மனப்பான்மை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளம்சாம்பல் நிறம் மகம் : உதவிகள் கிடைக்கும். பூரம் : அறிமுகங்கள் கிடைக்கும். உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாகன பராமரிப்புச் செலவுகள் நேரிடும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். நம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திரம் : பொறுப்புகள் மேம்படும். அஸ்தம் : திறமைகள் வெளிப்படும். சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மன பதட்டத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். முயற்சி ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் சித்திரை : மாற்றம் உண்டாகும். சுவாதி : நெருக்கடியான நாள். விசாகம் : நிதானம் வேண்டும்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஊடக துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளால் ஒரு விதமான சோர்வு உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் விசாகம் : பொறுப்புகள் மேம்படும். அனுஷம் : இழுபறியான நாள். கேட்டை : சோர்வுகள் மறையும்.
குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் அலைச்சல் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மூலம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும். பூராடம் : வாதங்களை தவிர்க்கவும். உத்திராடம் : அலைச்சல் மேம்படும்.
உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர்கள். கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் உத்திராடம் : ஒத்துழைப்பான நாள். திருவோணம் : வேறுபாடுகள் மறையும். அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
வியாபார ரீதியாக இருந்துவந்த தடைகள் விலகும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். பாகப் பிரிவினைகளில் பொறுமையுடன் செயல்படவும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் சகிப்பு தன்மையுடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எண்ணிய முடிவுகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் அவிட்டம் : தடைகள் விலகும். சதயம் : ஆதாயகரமான நாள். பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.
நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். தாமதம் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். உத்திரட்டாதி : தன்னம்பிக்கை உண்டாகும். ரேவதி : சாதகமான நாள்.