Bigg Boss Tamil Show Winners List : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது. கமல்ஹாசன், கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியை, இப்போது விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்து வருகிறார். இந்த நிலையில், இதுவரை பிக்பாஸ் டைட்டிலை வென்றவர்கள், இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சீசன் 1 வின்னர்-ஆரவ்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் அல்லது இது எப்படி செல்லப்போகிறது என்பது குறித்த புரிதல் யாருக்குமே இல்லை. அந்த சமயத்திலேயே சமயோஜிதமாக விளையாடி கோப்பையை வென்றவர், ஆரவ். மருத்துவ முத்தம், ஓவியா தற்கொலை முயற்சி என இந்த நிகழ்ச்சி ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற காரணமாக இருந்தவரும், ஆரவ்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியை வென்ற பிறகு ஆரவ் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. தனது சுய தொழில் ஒன்றில் கவனம் செலுத்தி வந்தார். இப்போதுதான், இவருக்கு பெரிய ஸ்டாரான அஜித்குமாருடன் விடாமுயற்சி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.
சீசன் 2 வின்னர்-ரித்விகா:
முதல் சீசன் போல இல்லாமல், கொஞ்சம் மொக்கையாக போன சீசன் இது. 2018ஆம் ஆண்டு நடந்த இந்த போட்டியில், மும்தாஜ், செண்ட்ராயன், டானியல், ஜனனி, யாஷிகா, மகத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சீசன் மூலமாகத்தான் முதல்முறையாக பெண் ஒருவர் வின்னர் அப் பட்டத்தை வென்றார். துணை நடிகையாக இருந்த பாேது பிக்பாஸ் இல்லத்திற்குள் சென்ற ரித்விகா, இப்போதும் துணை நடிகையாகவே இருக்கிறார். சொல்லப்போனால் இவரை தற்போது சினிமாவில் பார்ப்பதே அறிதாகி விட்டது.
சீசன் 3 வின்னர்-முகேன் ராவ்:
எத்தனை பிக்பாஸ் சீசன் வந்தாலும், இந்த சீசனை அடிச்சிக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு, பொழுது போக்காக இருந்தது, 3வது சீசன். சாண்டி மாஸ்டர், கவின், முகேன் ராவ் உள்ளிட்டோர் செய்த சேட்டைகள், இன்றளவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. டைட்டில் வென்ற முகேன் ராவ், தனியாக பாடல்களை எழுதி-பாடி டிஜிட்டல் தளங்களில் வைரலாகி வருகிறார். இருப்பினும், இவருக்கு திரையுலகம் பெரிதாக கை கொடுக்கவில்லை.\
சீசன் 4 வின்னர்-ஆரி அர்ஜுன்:
கொரோனா சமயத்தில் இந்த சீசன் ஆரம்பித்ததால், இதனை வீக்-எண்ட் எபிசோடில் நேரில் சென்று சிலரால் பார்க்க முடியவில்லை. 18 பேருடன் தொடங்கிய இந்த போட்டியில், ஆரம்பம் முதலே அலப்பறையுடன் விளையாடி, கடைசியில் டைட்டிலை தூக்கினார். ஆரி. இதில் கலந்து கொள்வதற்கு முன்பாவது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால், அதன் பிறகுபெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் அவரை தேடி வரவில்லை. இப்போது, ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியில் ஹோஸ்ட் ஆக இருக்கிறார்.
சீசன் 5 வின்னர்-ராஜு மோகன்:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே, இந்த சீசனுக்குதான் குறைவான டி.ஆர்.பி ரேட்டிங் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. வலுவான போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால், இதில் நடத்தப்பட்ட டாஸ்குகளும் கொஞ்சம் சொதப்பலாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இதில், இறுதியில் டைட்டில் வென்ற ராஜு மோகன் ஒரு தொகுப்பாளராக இருக்கும் போது போட்டிக்குள் வந்தார், இப்போதும் பல விருது விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். இருப்பினும் எங்கு சென்றாலும், “பிக்பாஸ் ராஜூ”வாக அறியப்படுகிறார்.
சீசன் 6 வின்னர்-அசீம்:
இந்த ஒரு சீசன், மக்கள் மத்தியில் ஒருவித புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்லாம். மக்கள், அசீம் மற்றும் விக்ரமின் சண்டையை வெறிகொண்டு பார்த்திருந்தனர். ஆனால், இதில் திருநங்கையாக வந்த ஷிவின்தான் ரியல் ஹீரோ என பலர் பேசிக்கொண்டனர். காரணம், இவர் பேசிய கருத்துகள் டிவியை தாண்டி மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தன. விக்ரம் ஜெயிப்பார் என அனைவரும் எதிர்பார்க்க, எதிர்பாராத விதமாக அசீம் வெற்றியாளர் ஆனார். இது, ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சமயத்தில் இல்லாத அட்டூழியம் செய்த ஒருவர், எப்படி வெற்றி பெறலாம் என பலருக்குள்ளும் சந்தேகம் எழுந்தது. இருப்பினும் அனைவரும் இறுதியில் அவர்தான் வெற்றியாளர் என்பதை ஏற்றுக்கொண்டனர். அசீம், இப்பாேதும் தன்னை “பிக்பாஸ் டைட்டில் வின்னர்” என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். இதைத்தாண்டி அவர் சினிமா அல்லது சீரியல் எதிலும் முகம் காட்டவில்லை.
சீசன் 7-அர்ச்சனா:
பிக்பாஸ் போட்டிக்குள் ஒருவர் வைல்ட் கார்டில் நுழைந்து, இறுதியில் டைட்டிலை அடித்தது, இதுவே முதன்முறையாகும். பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம், வீட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பேச்சு உள்ளிட்டவை இவருக்கு சாதகமாக அமைய, கடைசியில் டைட்டில் இவர் கைக்கு சென்றது. முன்னர் தொகுப்பாளராக இருந்த இவரை தேடி, இப்போது பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 8-வின்னர் யார்?
பிக்பாஸ் 8வது சீசனின் இறுதிப்போட்டி ஜனவரி 19ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இதில், டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், செளந்தர்யா, விஜே விஷால், ரயான், பவித்ரா ஆகியோர் உள்ளனர். இதில், முத்துக்குமரன் வெற்றிபெற நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. செளந்தர்யா இரண்டாம் இடம் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. இன்றைய நாளின் இறுதியில் என்ன நிலவரம் என்பதை லைவ்-ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் பரிசு என்ன? இவ்வளவு பெரிய தொகையா!
மேலும் படிக்க | பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் ‘இவர்’தான்! முன்னாள் போட்டியாளர்கள் சொன்ன ஆள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ