Bigg Boss 8 Tamil Title Winner Prize Money : மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன், கிட்டத்தட்ட இறுதிப்பாேட்டியை நெருங்கி விட்டது. இந்த நிலையில், டைட்டில் வெல்லப்போவது யார் என்பது குறித்த விவதத்தை ஒரு தரப்பினர் கிளப்பியிருக்க, இந்த டைட்டில் வின்னருக்கு என்ன பரிசெல்லாம் கிடைக்கப்போகிறது என்பது குறித்து ஒரு தரப்பினர் தேடி வருகின்றனர். அது குறித்தும், பிக்பாஸ் டைட்டிலை வெல்ல உறுதிப்படுத்தப்பட்ட நபர் குறித்தும் இங்கு பார்ப்போம்.
பிக்பாஸ் 8:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன், கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஆரம்பித்தது. 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன், இந்த சீசனை தன்னால் ஹோஸ்ட் செய்ய முடியாது என்று கூறி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, புதிய ஹோஸ்டாக விஜய் சேதுபதி களமிறங்கினார். முன்னர் இருந்த சீசன்களை போல, இந்த சீசனுக்கு பெரிதாக ரசிகர்கள் கவனம் கொடுக்கவில்லை. காரணம், கமல் இல்லாத இல்லாததா, அல்லது போட்டியாளர்கள் அனைவரும் ஒரே தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் என்பதா என தெரியவில்லை.
அப்படி இப்படி என 106 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஒரு வழியாக பிக்பாஸ் போட்டி முடிவுக்கு வர இருக்கிறது. இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், செளந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் இருக்கின்றனர்.
பரிசு என்ன?
பிக்பாஸ் 8 போட்டியை வெல்லப்போகும் டைட்டில் வின்னருக்கு, ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர்களாக இருக்கும் நிறுவனங்களும் பரிசுகளையும் பரிசு பொருட்களையும் வழங்க இருக்கிறது. டைட்டில் வின்னருக்கு, பிக்பாஸ் இல்லத்தில் இருந்த நாட்களுக்கான தாெகையும் மொத்தமாக வந்து சேரும்.
இரண்டாம் இடம் பெற்றவருக்கான பரிசு..
பிக்பாஸ் ரன்னர் அப் பெறப்போகும் போட்டியாளருக்கு, ரூ.5 லட்சம் பரிசாக கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அனைவருக்கும் போல, இவருக்கும் பிக்பாஸ் இல்லத்தில் நாட்களை கழித்ததற்கான பேமண்ட் வந்து சேர்ந்து விடும்.
டைட்டில் பெறப்போவது யார்?
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் படி, டைட்டிலை தட்டித்தூக்கப்போவது முத்துக்குமரன்தான் எனக்கூறப்படுகிறது. சென்னைக்கு, வேலைக்காக வந்த இவர், ஊடக நிறுவனங்களில் வேலை பார்த்து, பின்னர் ‘தமிழ் பேச்சு எங்கள மூச்சு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அதன்பிறகு தனக்கு கிடைத்த பிக்பாஸ் மேடையை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், இந்த நிகழ்ச்சியின் மூலம், தற்போது தமிழக அளவில் பிரபலமாகி விட்டார். இவருக்கும் ஜாக்குலினுக்கும் இடையே இருந்த நட்பும் அனைவருக்கும் பிடித்திருந்தது. சில ஆன்லைன் தளங்களில் வாக்கு எண்ணிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் முத்துக்குமரன்தான் வெற்றி பெறுவான என சிலர் கணித்து கூறுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
ரன்னர்-அப் யார்?
ரன்னர்-அப் பட்டம் பெறப்போகிறவர் யார் என்பது குறித்த கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. வித்தியாசமான குரலால் மக்களை ஈர்த்த செளந்தர்யா, ரன்னர் அப் பட்டத்தை பெற இருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான், வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறாராம்.
அடுத்தடுத்த இடங்கள்..
விஜே விஷால் 3வது இடத்திலும், பவித்ரா 4வது இடத்திலும், ரயான் 5வது இடத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இது குறித்த உண்மை நிலவரம் தெரிய வரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ