மதகஜராஜா கொடுத்த தைரியம்! விஷால் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள்..லிஸ்ட் இதோ!

Vishal Movie Line Ups After Madha Gaja Raja : தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக வலம் வரும் விஷால், தான் அடுத்தடுத்து கமிட்டாகியிருக்கும் படங்கள் குறித்த லிஸ்டை சமீபத்தில் அறிவித்தார்.

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2025, 08:50 AM IST
  • 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸான மதகஜராஜா
  • விஷாலின் அடுத்தடுத்த படங்கள்..
  • அவரே சொன்ன தகவல்..
மதகஜராஜா கொடுத்த தைரியம்! விஷால் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்கள்..லிஸ்ட் இதோ! title=

Vishal Movie Line Ups After Madha Gaja Raja : கோலிவுட் திரையுலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், விஷால். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்திருந்த நிலையில், படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இதையடுத்து, படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

மதகஜராஜா:

மதகஜராஜா திரைப்படத்தின் பணிகள் அனைத்தும், 2013ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு ரிலீஸிற்கு தயாராக இருந்தது. ஆனால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சில நிதி பிரச்சனைகளை சந்தித்ததால் அப்படத்தினை வெளியிட முடியாமல் போனது. பல்வேறு இன்னல்களை சந்தித்த இந்த திரைப்படம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திராத நிலையில், தற்போது இப்படம் நல்ல வசூலை பெற்று ஹிட்டும் அடித்துள்ளது.

இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் இன்னொரு முக்கிய மற்றும் காமெடி கதாப்பாத்திரமாக வருகிறார், சந்தானம். வில்லனாக சோனு சூட், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் கவனம் ஈர்க்கும் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஷாலின் அடுத்தடுத்த படங்கள்:

நடிகர் விஷாலுக்கு சமீப சில நாட்களாக உடல்நிலை சரியில்லை. மதகஜராஜா படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கை நடுக்கத்துடன் பேசினார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கை நடுக்கம் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அதன் வெற்றிவிழா சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், அவர் கை நடுக்கம் இன்றி, நன்றாகவே பேசினார். அப்போது தான் அடுத்தடுத்து கமிட் ஆகியிருக்கும் படங்கள் குறித்தும் கூறினார்.

Madhagajaraja

அப்போது, தான் கெளதம் வாசுதேவ் மேனனுடன் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார். இந்த படத்திற்கு பிறகு, துப்பறிவாளன் 2 படம் இருப்பதாகவும், அதன் பிறகு கோப்ரா மற்றும் டிமாண்டி காலனி 2 பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். 

ஆம்பள ரீ-ரிலீஸ்:

விஷால்-சுந்தர்.சி காம்போவில் தயாராகி பெரிய ஹிட் அடித்த படங்களில் ஒன்று, ஆம்பள. இந்த படத்தின் மூலமாக ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். இப்போது அவரே ஹீரோவாகி விட்டார். இந்த நிலையில், இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாவும் விஷால் விழா மேடையில் பேசினார். ஆனால், இது குறித்த படக்குழு தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

சுந்தர்.சியுடன் இன்னொரு படம்? 

சுந்தர்.சி, விஷாலின் கூட்டணியில் உருவான மதகஜராஜா மற்றும் விஷால், கூட்டணியில் உருவான மதகஜராஜா, ஆம்பள ஆகிய படங்கள் (ஆக்ஷன் படத்தை தவிர) வெற்றிபெற்றுள்ளன. மதகஜராஜா படத்தின் வெற்றிவிழா மேடையில் இதுகுறித்து பேசிய விஷால், மக்கள் பலர் சுந்தர்.சியுடன் அடுத்த படம் எப்போ என தன்னிடம் பேசுவதாகவும், அவர் ஓகே சொல்லிவிட்டால் அவருடைய இன்னொரு படத்தில் நடிக்க தயார் என்றும் கூறினார்.

கை நடுக்கம் குறித்து பேசிய விஷால்:

நடிகர் விஷால், கை நடுக்கம் குறித்து வைரலான வீடியோ குறித்தும் பேசினார். நிலநடுக்கம் வந்தால் கூட அதை அடுத்த நாள் மறந்து விடுவோம், ஆனால் விஷாலின் கை நடுக்கம் குறித்து பலர் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தீர்கள் எனக்கூறினார். பின்னர், தன் உடல் நலம் குறித்து உலகளவில் இருந்து பலர் தன்னிடம் நலம் விசாரித்ததாகவும், இதில் இருந்து பலரது அன்பை தான் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | ஜாலியா? காலியா? மத கஜ ராஜா படம் எப்படி? நெத்தியடி திரை விமர்சனம்!!

மேலும் படிக்க | 100 கோடி வசூலை எதிர்நோக்கி மதகஜராஜா? 4 நாளில் இத்தனை கோடி வசூலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News