பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 20ம் தேதி தான் கடைசி நாள்!

பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்கள் அடுத்தடுத்து செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

1 /6

நாடு முழுவதும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்ட ஆதார் அட்டையைப் போன்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தனித்துவமான அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

2 /6

இந்த முயற்சி, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். இது 2020ல் மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த முயற்சியின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.

3 /6

இந்த அடையாள அட்டை APAAR (Automated Permanent Academic Account Registry) என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள அமைப்பின் இலக்கை வலியுறுத்தி, இந்த முயற்சி "ஒரு நாடு ஒரு மாணவர் அடையாள அட்டை" திட்டம் என குறிப்பிடப்படுகிறது.

4 /6

சமீபத்தில், இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு சுற்றறிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகத்தால் அனுப்பப்பட்டுள்ளது.

5 /6

இந்த பிரத்யேக அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க பெற்றோரிடம் அனுமதி பெற பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அறிவுறுத்துகிறது. ஏற்கனவே பல மாநிலங்கள் அடையாள அட்டைகளை வழங்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளன.  

6 /6

இந்நிலையில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை, அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களுக்கு APAAR பிரத்யேக அட்டை எண்களை வழங்கும் பணியை தொடங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணியை வரும் 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.