India National Cricket Team: கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு தலைமை பயிற்சியாளரை மாற்றியது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு பிசிசிஐ நேர்காணல் நடத்தி கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
2024ஆம் ஆண்டின் முதல் பாதி இந்திய அணிக்கு வெற்றிகரமான ஒன்றாக இருந்தாலும், கம்பீர் அணியுடன் இணைந்த பின்னர் பிற்பாதி மிகவும் மோசமானதாக மாறியது. இலங்கை அணியுடன் டி20 தொடரில் இந்திய அணி வென்றாலும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது. அதாவது 27வது ஆண்டுக்கு பிறகு இலங்கையுடனான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது.
கம்பீர் தலைமையில் தொடர் தோல்வி
அதற்கு பிறகு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கம்பீர் வழிகாட்டுதலில் வென்றாலும், நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் ஆகியவற்றை இழந்து இந்திய அணி மோசமான நிலையில் உள்ளது. இதனால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பாரா இந்த ஸ்டார் பவுலர்? பிசிசிஐ ரியாக்ஷன்
கம்பீரின் லாஸ்ட் சான்ஸ்
இடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் விவிஎஸ் லஷ்மண் தான் பயிற்சியாளராக செயல்பட்டார். இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரும், ஜூன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரும்தான் கம்பீருக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
பேட்டிங் பயிற்சியாளரை தேடும் பிசிசிஐ?
தற்போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கீழ், பந்துவீச்சு பயிற்சியாளராக மார்னே மார்கலும், உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரயான் டென் டோசேட் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் செயல்படுகின்றனர். எனவே, இந்த பயிற்சியாளர்கள் குழுவில் இன்னும் சில பேரை பிசிசிஐ இணைக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பேட்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ நியமிக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
நான் ரெடி தான் வரவா - கெவின் பீட்டர்சன்
அப்படியிருக்க, இதுகுறித்து X தளத்தில், கிரிக்கெட் சார்ந்து பதிவிடும் Johns என்பவர் தனது பக்கத்தில் பேட்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளதை பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ் இங்கிலாந்து அணியின் முன்னாள் அதிரடி பேட்டர் கெவின் பீட்டர்சன், தான் அந்த பொறுப்புக்கு தயாராக இருப்பதாக கூறும் வகையில்,"Available" என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | "அவர் மட்டும் விளையாடாமல் இருந்திருந்தால்".. BGT குறித்து ரவி அஷ்வின்!
கெவின் பீட்டர்சன் சரியான தேர்வு... ஏன்?
ஒருவேளை, பிசிசிஐ பேட்டிங் பயிற்சியாளரை தேடி வரும்பட்சத்தில் அதற்கு கெவின் பீட்டர்சன் தகுதியானவர் என்றே கூறலாம். கெவின் பீட்டர்சன் இந்திய மண்ணில் மட்டும் 43 இன்னிங்ஸ்களில் விளையாடி 1876 ரன்களை, 45.75 சராசரியில் அடித்துள்ளார். இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் பேட்டிங்கில் கையாண்ட சில நுட்பமான விஷயங்களே 2013ஆம் ஆண்டில் இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
அதுமட்டுமின்றி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களை கையாள்வதற்கு கெவின் பீட்டர்சனே சரியானவர். கம்பீரை போன்றே ஆளுமைமிக்கவரான கெவின் பீட்டர்சன் இந்திய அணியின் பயிற்சியாளராக வரும்போது அணி இன்னும் பலம் பெரும். அவர் தற்போது தொலைக்காட்சி வர்ணனையில் ஈடுபடும்போது கூட பேட்டிங் சார்ந்த பல நுட்பமான விஷயங்களை விவாதிப்பதை பார்க்க முடியும். ஒருவேளை, இந்திய அணிக்குள் பேட்டிங் பயிற்யாளராக வரும்பட்சத்தில், சமீப காலமாக சரிவை சந்தித்திருக்கும் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை மாற்றமடையலாம்.
விராட் கோலி - கெவின் பீட்டர்சன்
மேலும், குறிப்பாக விராட் கோலி மற்றும் கெவின் பீட்டர்சன் இருவரும் பரஸ்பரம் மதிப்பும், மரியாதையையும் கொண்டவர்கள். விராட் கோலியை இந்த தலைமுறையின் சிறந்த பேட்டர் என கெவின் பீட்டர்சன் எப்போதுமே பாராட்டுவார். அதேபோல், விராட் கோலியும் தன்னுடைய ஆட்டத்தில் பீட்டர்சனால் ஏற்பட்ட தாக்கம் குறித்தும் பேசியுள்ளார்.
இப்படியிருக்க, விராட் கோலி தற்போது கடினமான சூழலில் இருந்து வருகிறார். கெவின் பீட்டர்சன் ஒருவேளை 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை பேட்டிங் பயிற்சியாளராக இருந்தால் விராட் கோலிக்கும், ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பெரும் பலம் சேர்க்கும்.
மேலும் படிக்க | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: டிக்கெட் விலை அறிவிப்பு - முழு விவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ