ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!! ரஜினியை விட 40 வயது இளையவர்..

Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : 74 வயதானாலும், இப்போது வரை இளைஞருக்குரிய துடிப்புடன் பல படங்களில் கமிட் ஆகியிருப்பவர், ரஜினிகாந்த். இந்த ஆண்டில் இவர் நடித்திருக்கும் கூலி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இவர் அடுத்து நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டும் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தில் புதிதாக ஒரு நடிகை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

1 /7

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியானது. இது தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெரிய திரையில் திரையிடப்பட்டது. 

2 /7

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஆகிய இருவரும் இந்த ப்ரமோவில் இடம் பெற்றிருந்தனர். இதில், ரஜினிகாந்திற்கு மாஸான காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன.

3 /7

ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ரஜினிக்கு ஒரு பக்காவான ஃப்ரேம் வைக்கப்பட்டுள்ளது. இதிலும் அவர் முத்துவேல் பாண்டியனாக தொடர்கிறார். 

4 /7

ஜெயிலர் 2 படத்திற்கு ஹுக்கும் என பெயரிடப்படும் எனக்கூறப்படுகிறது. கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு, ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக்கூறப்படுகிறது. 

5 /7

ஜெயிலர் 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. 

6 /7

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். 

7 /7

ஷ்ரத்தா ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவர் ரஜினியை விட 40 வயது இளையவர் என்ற விவரம் மட்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.