இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா? இதுதான் அர்த்தம்!

Dead Person Comes In Dream Meaning : நம்மில் பலருக்கு இறந்து பாேனவர்கள் கனவில் வருவர். அப்படி அவர்கள் வருவது நல்லதா கெட்டதா? இதோ அதற்கான அர்த்தம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 20, 2025, 05:53 PM IST
  • இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?
  • இப்படி சொன்னால் கவனம் அவசியம்..
  • அனைத்திற்கும் அர்த்தம் இதோ..
இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா? இதுதான் அர்த்தம்! title=

Dead Person Comes In Dream Meaning : மனிதர்களாக பிறந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகில் உயிரோடும் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கனவு வருவது சகஜம். இப்படி ஆழ்ந்து உறங்கும் போது அல்லது அரை தூக்கத்தில் இருக்கும்போது கூட கனவு வரும். இந்த கனவுகளுக்கு அர்த்தம் இருப்பதாக ஒரு சிலர் கூற, நமது கற்பனை அல்லது ஆழ்மனதில் இருக்கும் சிந்தனைகளின் வெளிப்பாடுகள் தான் என சிலர் கூறுகின்றனர். ஒரு சில நேரம் நல்ல கனவுகள் வரும் அப்போது தூக்கத்திலிருந்து விழிக்கும் போது ஏண்டா எழுந்தோம் என்று இருக்கும். இன்னும் சில நேரம் அது நிஜமில்லை என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சில கொடூரமான கனவுகள் வரும். அவற்றிலிருந்து எழுந்தவுடன் ஓ கனவுதானா என்று தோன்றும். இப்படி பல கனவுகள் இருக்கையில், அனைவரையும் பயமுறுத்தும் கனவாக இருப்பது இறந்து போனவர்கள் கனவில் வருவது தான். அப்படி இறந்து போன ஒருவர் கனவில் வந்தால் அதற்கான அர்த்தம் என்ன? இங்கு பார்ப்போம்.

நீண்ட ஆயுள்..

இறந்து போனவர்கள் உங்கள் கனவில் வந்தால் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று அர்த்தமாகுமாம். இறந்து போனவர்கள் இப்படி நம் கனவில் வந்து நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என நம்மை ஆசிர்வதிப்பதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல இப்படி ஒருவர் கனவில் வந்தால் நமக்கு பலவித நன்மைகளும் நடக்குமாம்.

அழுதால் என்ன செய்வது? 

ஒரு சில சமயங்களில் இறந்து போனவர்கள் நம் கனவில் வந்து அழுவது போன்ற காட்சிகள் தோன்றும். இது போன்ற கனவுகள் நல்லதல்ல என கூறப்படுகிறது. அப்படி இறந்து போனவர்கள் உங்கள் கனவில் வந்து அழுதால் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வது நல்லது.

பேசுவது போல கனவு வந்தால்..

பெரும்பாலான சமயங்களில் இறந்து போனவர்கள் கனவில் வரும்போது அங்கு பேச்சு வார்த்தைகள் எதுவும் இருக்காது. ஆனால் அவர் உங்களிடம் வந்து பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு பேரும் புகழும் சேரப் போகிறது என்று அர்த்தமாம்.

உறங்குவது போல கனவு வந்தால்…

இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் அல்லது உங்களுடன் வந்து உறங்குவது போல கனவு வந்தால், நீங்கள் ஏதோ ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறீர்கள் என்று அர்த்தமாம். அவர்கள் உங்களை பாதுகாப்பதற்கான குறியீடாக இதுபோன்ற கனவுகள் விளங்குகிறது.

நீங்கள் இறந்தது போல கனவு வந்தால்..

ஒரு சில சமயங்களில் நீங்களே இறந்து போனது போல கனவு காணுவீர்கள். அப்படிப்பட்ட கனவு வந்தால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்க போகிறது என்று அர்த்தமாம். நீங்கள் இறந்தது போல பிறருக்கு கனவு வந்தாலும் இதுதான் அர்த்தம் என கூறப்படுகிறது.

இறந்த தந்தை கனவில் வந்தால்…

நீங்கள் ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையில் இருக்கும்போது இறந்து போன உங்கள் தந்தை கனவில் வந்தால் அந்த பிரச்சனை தீர போகிறது என்று அர்த்தமாம். இதற்கான வழியை நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ எப்படியோ இந்த கனவிற்கு பிறகு கண்டுபிடித்து விடுவீர்களாம்.

இறந்து போன தாய் கனவில் வந்தால்…

இறந்து போன உங்களது தாய் உங்கள் கனவில் வந்தால் உங்கள் உறவினர்கள் அல்லது உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம். அவரே கூட அந்த குழந்தை வடிவில் பிறக்கலாம் என கூறப்படுகிறது.பல சமயங்களில் இறந்து போனவர்கள் நமக்கு வரும் ஆபத்து அல்லது கண்டங்களை சுட்டிக்காட்டுவதற்காக கனவில் வருவார்கள் என கூறப்படுகிறது. எனவே இது போன்ற கனவுகள் வரும்போது அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இது எப்போதும் அனைவருக்கும் பொருந்தி விட வேண்டும் என்று அவசியமில்லை. பல சமயங்களில் கனவுகள் வரும் கனவுகளாக மட்டும் கூட இருக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 

 

மேலும் படிக்க | பூனை குறுக்கே போனால் அபசகுனமா: பூனையால் வரும் நல்ல சகுனங்கள் என்னென்ன தெரியுமா

மேலும் படிக்க | கர்ப்பமாக இருப்பதுபோல் கனவு வந்தால் என்ன அர்த்தம்? நல்ல விஷயமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News