சென்னையில் பயங்கரம்! அண்ணன், தம்பி ஒரே இரவில் ஓட ஓட வெட்டிக்கொலை

Murder | சென்னையில் ஒரே இரவில் அண்ணன், தம்பி இருவரும் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 19, 2025, 07:56 AM IST
  • சென்னையில் இரட்டைக் கொலை
  • அண்ணன், தம்பி ஒரே இரவில் கொலை
  • தப்பி ஓடிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சென்னையில் பயங்கரம்! அண்ணன், தம்பி ஒரே இரவில் ஓட ஓட வெட்டிக்கொலை title=

Chennai Murder | சென்னை ஆவடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இரட்டைக் கொலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அண்ணன், தம்பி இருவரும் முன்பகை காரணமாக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து ஆவடி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளின் அண்ணனும் 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் மூவரும் கொலையான சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில் சேரி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன்கள் ரெட்டைமலை சீனிவாசன்(28), ஸ்டாலின்(25). இரட்டை மலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளன.இவரது தம்பி ஸ்டாலின்.ரவுடி பட்டியலில் C பிரிவில் இடம் பெற்றுள்ளார். இதில் ரவுடி ஸ்டாலின் வீட்டின் அருகே ஆயில் சேரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது அண்ணன் இரட்டைமலை சீனிவாசன் ஆவடி பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்தார்.இ ருவரும் தனி தனியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் மற்றும் ஆவடி காவல்துறையினர் இருவர் சடலத்தையும் மீட்டு  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இரு கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக மர்ம கும்பளுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதில் பட்டாபிராம் நோக்கி ஸ்டாலினும், ஆவடி நோக்கி இரட்டைமலை சீனிவாசனும் சிதறி ஓடி உள்ளனர். இருந்தபோதிலும் விடாமல் இரு குழுக்களாக துரத்திய அந்த மர்ம கும்பல் பட்டாபிராமில் ஸ்டாலினையும்' ஆவடி பகுதியில் அண்ணன் ரெட்டைமலை சீனிவாசனையும் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்களது முதல் அண்ணன் கக்கன்  2017ம் ஆண்டு பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையானவர்களின் தந்தை கஜேந்திரனுக்கு இருந்த மூன்று மகன்களும் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆயில்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் துணை ஆணையர் ஐமன் ஜமால் பார்வையிட்ட நிலையில், தற்போது சம்பவ இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் 6 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மேலும் படிக்க | பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News