நீங்க புத்திசாலியா இருக்கணுமா? இதை செய்யுங்க!

புத்திசாலிகள் கடைபிடிக்கும் சில பண்புகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

நம்மில் பலர் நிறைய விஷயங்களில் புத்திசாலியாக செயல்பட முயல்வோம். ஆனால் நம்மிடம் இருக்கும் சில குறைகள் அதைச் செய்யத் தடுக்கும். ஆனால் சிலர் அவர்களிடம் உள்ள பண்புகளால் அதனை கச்சிதமாகச் செய்து முடிப்பார்கள். அதற்கு அவர்கள் கடைப்பிடிக்கும் சில பண்புகளே காரணம். அப்படி அவர்கள் கடைப்பிடிக்கும் பண்புகள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /7

புத்திசாலிகள் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கேள்விகள் கேட்டு தங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை நாடுகிறார்கள். 

2 /7

அவர்கள் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்வார்கள். புதிய சவால்களும், மாற்றங்களும் அவர்களது வாழ்வில் முன்னேற உதவுகிறது. 

3 /7

அவர்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களுடன் உள்ளனர். அதாவது சில விஷயங்களில் உறுதியுடன் இருக்கும்போது மற்றவர்கள் ஆதாரத்துடன் உண்மையைக் கூறும்போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் உள்ளனர். 

4 /7

அவர்கள் தங்களது பலம் மற்றும் பலவீனம் மற்றும் அதன் செயல்முறைகளின் மீது ஆழமான நம்பிக்கை மற்றும் புரிதலை கொண்டுள்ளனர். 

5 /7

புத்திசாலிகள் பிரச்சனையின் அடிநாளத்தை ஆராய்ந்து ஆக்கப்பூர்வமான மற்றும் பயனுள்ள தீர்வுகளைக் கண்டறிகிறார்கள். 

6 /7

நகைச்சுவை உணர்வும் ஓர் தகுதியே. ஏனெனில் அவர்கள் கடினமான நேரத்தில் கூட பிரச்சனைகளை எளிதாக கையாள்வார்கள். 

7 /7

இவர்கள் மற்றவர்களைக் கவனிப்பார்கள். அதாவது மற்றவர் பேசும் போது அதனைக் காது கொடுத்துக் கேட்பது. அவர்கள் செய்யும் செயல்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். மற்றவர்கள் நிறை குறைகளை எடை போடுவார்கள்.