50 வருஷங்களுக்கு பின்... பூச நட்சத்திரத்தில் செவ்வாய் - 3 ராசிகளுக்கு பொற்காலம் பிறக்கிறது

Mars Constellation Transit: சனி பகவானின் நட்சத்திரமாக கருதப்படும் பூசத்தில் செவ்வாய் பகவான் நுழைவதால், 3 ராசிகளுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

பூச நட்சத்திரத்தில் 50 ஆண்டுகளுக்கு பின்னர் செவ்வாய் கிரகம் தற்போது நுழைய இருக்கிறார். இதனால் இந்த மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமாகும்.

1 /8

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும், நட்சத்திரங்களுக்கும் பெயர்ச்சி ஆகும். அப்படியிருக்க சனி பகவானுக்கு உகந்த நட்சத்திரமாக கருதப்படும் பூசத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் செவ்வாய் பகவான் நுழைய இருக்கிறார்.   

2 /8

வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி காலை 6.32 மணிக்கு பூச நட்சத்திரத்தில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி ஆகிறார் என ஜோதிடர்கள் கணித்துள்ளார். இதனால் சிறப்பான யோகம் உண்டாகிறது.   

3 /8

பூசத்தில் செவ்வாய் பகவான் வருகையால் இந்த மூன்று ராசியினரின் வாழ்க்கையில் இனி பொற்காலம்தான். நினைத்ததெல்லாம் நடக்கும், கை வைக்கும் அத்தனை விஷயங்களிலும் வெற்றி மேல் வெற்றிதான்.   

4 /8

குறிப்பாக, பூசத்தில் செவ்வாய் நுழைவதால் பணியிலும், வியாபாரத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும். தேக்கமடைந்த வேலைகள் இந்த காலகட்டத்தில் வேகமெடுத்து புதிய உச்சத்தை அடையும். அந்த வகையில், அந்த 3 ராசியினருக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம்.   

5 /8

கடகம்: பூசத்தில் செவ்வாய் வருவதால் கடக ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. பெரிய வியாபார வாய்ப்பு உண்டாகும், இதனால் பொருளாதாரமும் வளரும். சமூகத்தில உங்களின் மதிப்பு உயர்வதற்கான காலகட்டம் இது. திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.   

6 /8

கன்னி: இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரருக்கு வேலையில் பணி கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். பொருளாதார நிலைமை வலுவாகும். உங்களின் தன்னம்பிக்கை உச்சத்தை அடையும். நீங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். புது தொழிலையும் நீங்கள் தொடங்கலாம், முதல் நாளில் இருந்தே உங்களுக்கு லாபம் கொட்டும்.   

7 /8

மீனம்: இந்த காலகட்டத்தில் வணிகர்களின் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். உங்கள் செலவை ஒப்பிடும்போது உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகமாக இருக்கும். புதிய மாடல் காரையோ அல்லது வீட்டையோ நீங்கள் விலைக்கு வாங்குவீர்கள். ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருள்களையும் நீங்கள் வாங்குவீர்கள். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி வசமாகும்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான மற்றும் கணிப்புகள் சார்ந்தது ஆகும். இதனை ஜீ நியூஸ் உறுதிப்படுத்தவில்லை.