Union Budget 2025 News: இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செயப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 அம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார்.
EPFO Latest News: இபிஎஃப் சந்தாதாரர்கள் பிப்ரவரி மாதத்தில் இருந்து இந்த பலனை பெறுவார்களா? நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்த தொழிலாளர் அமைப்பு
பிப்ரவரி 1, 2025 அன்று, மத்திய மோடி அரசாங்கம் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் இந்த பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். எனவே பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கள் கோரிக்கைகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். அதில் இபிஎஃப்ஓ (EPFO) ஊழியர்களும் தங்கள் கோரிக்கையை வைத்துள்ளனர். அதுக்குறித்து பார்ப்போம்.
இபிஎஃப்ஓ மூலம் பெறப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச EPS ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.1000 லிருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று இபிஎஃப் ஊழியர் அமைப்புகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு இபிஎஃப் ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் 36.60 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் இந்தத் தொகையை விடக் குறைவாகவே ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்று தொழிலாளர் அமைப்பு குழு கூறுகிறது.
எனவே இபிஎஸ் -95 குழு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது. EPFO-வின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும், அகவிலைப்படி அதிகரிப்பு (DA), எட்டாவது சம்பளக் குழுவை உடனடியாக அமைக்கவும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது மனைவியர் இருவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை உட்பட கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக நிதியமைச்சர் உறுதியளித்தார். இந்நிலையில் 8வது சம்பளக் குழுவை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஊடகங்களில் வெளியாகி செய்திகளைப் பார்த்தால், "தனியார் துறை ஊழியர்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கலாம் எனத் தெரிகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், மில்லியன் கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.5,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் பரிந்துரைத்து உள்ளன.
EPF இரண்டு வகையான கணக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று ஓய்வு பெறும்போது மொத்தமாகத் பணத்தை திரும்பப் பெறலாம், மற்றொன்று மாதாந்திர ஓய்வூதியம். அதாவது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் கொடுக்கும் 12% பங்களிப்பில், 8.33% ஓய்வூதியத்திற்கான EPS-க்கும், மீதமுள்ள 3.67% EPF-க்கும் ஒதுக்கப்படுகிறது. அரசாங்கமும் இதற்கு 1.16% பங்களிக்கிறது.
ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் (EPF Account) பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் இபிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றது. ஆனால், நிறுவனம் அளிக்கும் பங்களிப்பில் முழு தொகையும் இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இதில் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதமுள்ள 3.67% இபிஎஃப் (EPF) கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது.
இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) 1995 இல் தொடங்கப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் மற்றும் அதனுடன் VDA-வையும் சேர்க்க வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்க அமைப்பு கூறுகிறது. அதே நேரத்தில், சில தொழிற்சங்கங்களும் இதை மாதத்திற்கு ரூ.5,000 ஆக பரிந்துரைத்துள்ளன. ஆனால் ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும், அத்தகைய சூழ்நிலையில் இதை ரூ.7500 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் தொழிலாளர் அமைப்பு கோரிகக்கி வைத்து வருகிறது.