Shukran Peyarchi 2025: மீன ராசியில் சுக்கிரன் பகவான் பெயர்ச்சி ஆவதால் மாளவ்யா ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோகத்தால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாற்றமடையும்.
சுக்கிர பெயர்ச்சியால் வரும் மாளவ்யா ராஜயோகம் (Malavya Rajayogam) என்பது சுபமான ஒன்றாகும். இதனால், இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பானதாக மாறும். இந்த 5 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
சுக்கிர பகவான் (Shukran) செல்வதற்கும், செழிப்பிற்கும் பெயர் பெற்றவர். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களின் வாழ்வில் பணம் சார்ந்து எவ்வித பிரச்னையும் வராது.
ஜோதிடர்களின் கணிப்புபடி, வரும் ஜன. 28ஆம் தேதி அன்று சுக்கிரன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மாளவ்யா ராஜயோகம் உண்டாகிறது. மாளவ்யா ராஜயோகம் என்பது சுபமான ஒன்றாகும். இந்த ராஜயோகத்தால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கை செழிப்பாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
ரிஷபம் (Taurus): இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் 11வது வீட்டில் இருக்கிறார். இதனால், சுக்கிரன் பெயர்ச்சி காலகட்டம் இவர்களுக்கு மிக அற்புதமானதாகும். திருமண வாழ்க்கையும், காதல் வாழ்க்கையும் சிறக்கும். எதிரிகள் அனைவரும் நண்பர்களாக மாறுவார்கள். பணியிடத்தில் உங்களின் மதிப்பு கூடும். தொழிலில் லாபம் பெருகும். பல ஆண்டுகளாக தடைப்பட்டு நடைபெறாமல் இருந்த வேலைகள் அனைத்தும் நடக்கும்.
மிதுனம் (Gemini): இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறான். இதனால், உங்களின் பணி சார்ந்த வாழ்வு சிறக்கும். பணியிடத்தில் உடன் பணியாற்றுவோர் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். திருமண வாழ்க்கையோ, காதல் வாழ்க்கையோ உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை பார்ப்பதற்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். வேலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.
கடகம் (Cancer): சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 9வது வீட்டில் இருக்கிறார். இதனால், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மேலும், பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா செல்வீர்கள். தொழில் மற்றும் வேலை சார்ந்து நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்வீர்கள். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
சிம்மம் (Leo): இந்த ராசிக்காரர்களின் 8வது வீட்டில் இருக்கிறார். இதனால், சுக்கிர பெயர்ச்சி காதல் வாழ்க்கையை சுபமானதாக மாற்றும். பணியிடத்தில் சிறப்பான பல வாய்ப்புகள் உண்டாகி, முன்னேற்றங்கள் வரும். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழிலும் சூடு பிடிக்கும். நிறைவுபெறாத வேலைகள் அனைத்தும் முற்றுப்பெரும். சொத்தின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு (Sagittarius): இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 4வது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாகனங்கள் மூலம் செழிப்பு உண்டாகும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். சந்தோஷமும், வசதியும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.